பெங்களூரு, அக். 05- இறந்துவிட்டதாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து 8 பேரின் பெயர் களை நீக்கக்கோரி பசவபுடா பட்டல் சட்டமன்ற உறுப்பினர் படிவம்-7 சமர்ப்பித்து பரிந்துரை செய்த நிலையில், அந்த 8 வாக்காளர்களும் மாவட்ட ஆட்சியர் முன்பு நேற்று (9.10.2026) ஆஜராகி அதிர்ச்சி அளித்தனர். மேலும் அவர்கள் பசவபுடா பட்டல் சட்டமன்ற உறுப்பினர்மீது பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளனர்.
கருநாடகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.இ.ஆர்.) நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் 1.07 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதில் இறந்தவர்கள், 2 இடங்களில் உள்ள பெயர்கள், நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் பெயர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதுதவிர சுமார் 43 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் முகவரியில் முரண்பாடுகள் உள்ளதால் அவர்களுக்கு விளக் கம் கேட்டு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியது. இதற்கிடையே மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக பிரமுகர்கள், சிறுபான்மையினர், தலித் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்டோரின் பெயர்களை நீக்கக் கோரி படிவம்-7 அய் பாஜகவினர் மொத்தமாக தாக்கல் செய்துள்ளதாக முதல மைச்சர் டி.கே.சிவக்குமார் பர பரப்பு குற்றம் சாட்டினார். இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளி யிட்டார்.
இதற்கு காரணமான பாஜகவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கடந்த வாரம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மறியல் போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட விஜயாப்புரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பசவபுடா பட்டல்யத்தினால், கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ஆம் தேதி, தனது தொகுதியில் இறந்த 8 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில்இருப்பதாக கூறி, அதற்காக இறப்பு சான்றிதழ்களையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில் அவர் இறந்து இறந்ததாக கூறிய 8 வாக்காளர்களும் விஜயாப்புரா மாவட்ட ஆட்சியர் ஆனந்த் முன்பு ஆஜராகி, தாங்கள் இறக்கவில்லை என்றும், உயி ருடன்தான் இருக்கிறோம் என்றும் கூறி வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் பசவபுடா பட்டல்யத்தினால் மீது ஆட்சியரிடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆட்சியர் ஆனந்திடம் கூறுகையில், ‘எங்களின் இறப்பு சான்றிதழ் அவருக்கு எப்படிக் கிடைத்தது. வாக்காளர் பட்டியலில் இருந்து எங்களின் பெயர்களை நீக்க சதி நடக்கிறது. உயிருடன் இருக்கும் எங்களுக்கு இறப்புச் சான்றிதழ் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த சான்றிதழ் போலியானதா? அல்லது மாநகராட்சி அதிகாரிகள் தவறு செய்துள்ளார்களா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இந்த சான்றிதழ் வழங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
