போதை இல்லா கிராமங்களாக மாற்ற 126 கிராமங்கள் தேர்வு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருநெல்வேலி, அக்.4 திருநெல்வேலி காவல் சரகத்தில் போதைப்பொருட்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் முதற்கட்டமாக 126 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றை போதை இல்லாததாக மாற்ற சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி காவல் சரக டி.அய்.ஜி., திருநாவுக்கரசு கூறியதாவது:

திருநெல்வேலி காவல் சரகத் தில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன. ஏர்வாடி, தூத்துக்குடி உள் ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு காவல் நிலைய எல்லை யிலும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதை போதைப்பொருள் இல்லாத கிராமமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக 126 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அக்., 15க்குள் இந்த கிராமங்களில் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தொடர்ந்து, மேலும் பல கிராமங்களையும் இத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் ஒவ்வொரு காவல் துணைக் கோட்டம் மூலமாகவும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாகனச் சோதனைகள் மூலமாகவும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இளம் சிறார்களுக்கு புகையிலைப் பொருட் களை விற்பனை செய்வோர் மீது சிறைத் தண்டனை உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *