“புதுச்சேரி இப்போது கொலைச்சேரியாக மாறிவிட்டது” தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுச்சேரி, அக்.4 “என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி இப்போது கொலைச்சேரியாக மாறி விட்டது. ஒரு வாரத்துக்குள் சர்வ சாதாரண மாக 4 கொலை நடக்கிறது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் (4.10.2026) ஓய்கிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் சேது செல்வத்துக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியது:

“தமிழ்நாடு போல புதுச்சேரி மக்களின் வளத்துக்கும், நலத்துக்கும் பங்காற்றிய கட்சி திமுக. புதுச்சேயில் கடந்த சில ஆண்டாக ஆளுநர் மூலம் ஆபத்து வந்த போது மாநிலத்துக்காக திமுக போராடியது.

திமுக ஆட்சி புதுச்சேரியில் நடந்த போதெல்லாம் புதிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ‘சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்’ என்ற கலைஞர் வாக்குப்படி புதுச்சேரி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளோம்.

தாலிக்குத் தங்கம் திட்டம், சத் துணவில் முட்டை, லாஸ்பேட்டை உழவர் சந்தை ஆகியவை திமுக அரசின் சாதனைகள். இதனை மனதில் வைத்து தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இது மக்கள் மீது திணிக்கப்பட்ட இடைத்தேர்தல். ரங்கசாமி பொதுத் தேர்தலில் 2 தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். சட்டப்படி ஒரு தொகுதி பதவி விலக வேண்டும் என்பதால் தட்டாஞ்சாவடி தொகு தியை கைவிட்டுவிட்டார். அவரை நம்பி வாக்களித்த உங்களை கை கழுவி விட்டார். இம்முறை நீங்களும் அவரை கைவிட்டு விடுங்கள்.

என்.ஆர். காங்கிஸ் – பாஜக கூட்டணி வேட்பாளராக ஒருவரை நிறுத்தியுள்ளனர். அவர் யார் என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

கடந்த முறை அவர் போட்டியிட நீதிமன்றம் ஏன் தடை விதித்தது என உங்களுக்கு தெரியும். அவரைத்தான் ரங்கசாமி வேட்பாளராக நிறுத்தி யுள்ளார். மறுபுறம் காங்கிரஸ் ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு சொந் தக்காரர் என்றால், காங்கிரஸ் வேட்பாளர் சாராய சாம்ராஜ்ஜியத் துக்கு சொந்தக்காரர் என்பது அனைவருக்கும் தெரிந்தே உள்ளது. ஆனால், திமுக வேட்பாளர் நேர்மை யான பின்புலம் கொண்டவர். வேட்பாளர் சேதுசெல்வம் தொழிலா ளர்களுக்காக போராடி சிறை சென்றவர். அவரை தேர்வு செய்தால் மக்களுக்காக உண்மையாக உழைப்பார்.

ரங்கசாமி மக்களுக்கு செய்த நன்மைகள் ஏதும் இல்லை? தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்  அலுவலகம்கூட இல்லை. இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க, தொழில்பேட்டையில் புதிய தொழிற் சாலைகள் அமைய, மின்வெட்டுக்கு தீர்வு காண திமுகவுக்கு வாக்களியுங்கள்.

இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியா மலரப்போகிறது என சிலர் கேட்கின்றனர். ஆட்சி மாற்றம் நடக்காவிட்டாலும், தொகு தியில் காட்சி மாற்றம் நடக்கும்.

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி இப்போது கொலைச்சேரியாக மாறிவிட்டது. ஒரு வாரத்துக்கு சர்வசாதாரணமாக 4 கொலைகள் நடக்கின்றன. பட்டப்பகலில், நண் பகலில், மாலையில், நள்ளிரவில் என அடுக்கடுக்காக கொலை நடக்கிறது.

முதலமைச்சர்  ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் என்ன செய்கின் றனர்? குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லக்கூட வாய் திறக்காத ஆட்சி நடக்கிறது.

இரட்டை இன்ஜின் ஆட்சி இருந்தால், நல்லாட்சி நடக்கும் என்றனர். ஒரு இன்ஜினும் இங்கு வேலை செய்யவில்லை. சட்டம் – ஒழுங்கு, நிர்வாக சீர்குலைவு புதுச்சேரியை வாட்டி வதைக்கிறது. இதையெல்லாம் தட்டிக்கேட்க திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *