பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறது கேரளம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கொச்சி, அக்.4 “பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, அதில்இருந்தும், குப்பைகளில் இருந்தும் மின்சாரம் தயாரிப்பதற்கான முன் மாதிரி ஆலைகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கேரளத்தில் அமைக்கப்படும்,” என, அம்மாநில முதலமைச்சர் சதீசன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் காங்கிரசை சேர்ந்த முதலமைச்சர் சதீசன் தலைமையில், அய்க்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, ‘நிர்மலம்: துாய்மையான கேரளா வின் புதிய சகாப்தம்’ என்ற பெயரிலான அய்ந்து ஆண்டு திட்டத்தை, மாநில அரசு முன்னெடுத்துள்ளது.

இந்த திட்டத்தை முதலமைச்சர் சதீசன், கொச்சியில் நேற்றுமுன்தினம் (2.10.2026) தொடங்கி வைத்து பேசியதாவது:

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்று வதற்கு இரண்டு அல்லது மூன்று முன்மாதிரி ஆலைகளும், சாதாரண கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க நான்கு அல்லது அய்ந்து முன்மாதிரி ஆலைகளும் அமைக்கப்படும்.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த ஆலைகள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. நிர்மலம் திட்டத்தின் மூலம், 2031, மார்ச் 30க்குள் கேரளம் குப்பையில்லா மாநிலமாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *