தொகுப்பு:
குடந்தை பொறியாளர் க.சிவக்குமார்

கும்பகோணத்தில் தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, பெரியார் கொள்கைக் குடும்பங்கள் ஒன்று கூடுகை விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
குடந்தை கழக மாவட்ட திராவிடர் கழகம், மாநகர திராவிடர் கழகம், மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் மோதிலால் தெரு ஏ.எம். மகாலில் 2.10.2026 அன்று காலை முதல் மாலை வரை தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியார் கொள்கைக் குடும்பங்கள் ஒன்று கூடுகை விழா குடும்ப விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
காலை 8 மணிக்கு வருகை பதிவு தொடங்கி, தொடர்ந்து ஈட்டி கணேசனின் மந்திரமா, தந்திரமா? நிகழ்ச்சி, குடும்பங்கள் அறிமுகம் இவற்றோடு அவர் தாம் பெரியார் பெரியார் பிஞ்சுகளின் குரல் மெழியும் ஒலித்தன.
பெரியார் பிஞ்சுகள், மாணவர்கள், இளைஞர்களின் சார்பாக கராத்தே, சிலம்பம், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் கலந்து கொண்டு பகுத்தறிவுப் பாடல்களை பாடி நிகழ்ச்சிக்கு வந்திருந்த கழக குடும்பத்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டும், காலை முதல் மாலை வரை ஒவ்வொரு நிகழ்வையும் தேநீர் துவங்கி மதிய இறைச்சி உணவு முதற்கொண்டு அனைத்திலும் கண்ணும், கருத்துமாக ஒவ்வொரு வினாடியும் திட்டமிட்டு குடும்ப விருந்து நிகழ்ச்சியை மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை வழிநடத்தி சிறந்த உத்வேகத்தை குடந்தை கழக மாவட்டத்திற்கு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் பெரியார் படத்தினை வரைந்த பெரியார் பிஞ்சுகள் நி. பெருமை, இசையமுது ஆகியோர் பாராட்டப்பட்டனர். பெரியார் பாடல் அஸ்வின் பாடினார். முற்போக்கு சிந்தனை பாடல்களை அமுல் தாஸ் மற்றும் சரோஜா ஆகியோர் பெண்ணடிமை மற்றும் சகுனம் விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட பாடல்களை பாடினார்கள்.

அவர் தாம் பெரியார்.. பெரியார் பிஞ்சுகளுக்கான மேடையில் சுபிக்ஷா, அபர்ணா, நிக்காஸ், சவுந்தர்யா, மேகன், நி.ம.அபிலாசா, யாழினி, ரஞ்சித் குமார், விருக்ஷா, அன்புச்செல்வன், மதிவதனி, சத்யா மற்றும் ராஜசிறீ ஆகியோர் மழலை வடிவில் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். குடும்பங்கள் அறிமுக நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி தோழியர்கள் அம்பிகா, திரிபுரசுந்தரி, நிம்மதி சங்கீதா, அனிதா, டெய்சி ராணி, எழிலரசி திலீபன், உதயா, செந்தமிழ் செல்வி ஆகியோர் திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெரியார் கொள்கையால் ஏற்பட்ட தங்கள் வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களை எடுத்துரைத்தார்கள்.
“கொள்கைத் தலைவர் பெரியார் மற்றும் குடும்பத் தலைவர் ஆசிரியர்” என்ற தலைப்பில் ஆண்களுக்கான குரலில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் தாராசுரம் வை.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை துரைராசு, பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சு.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்மணி, முன்னாள் கழக அமைப்பாளர் குடந்தை. க.குருசாமி, பெரியார் விருதாளர் கு.ப.ஜெயராமன், சா.வெங்கடேசன், பேராசிரியர் பாலசுப்பிரமணியன், தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் உ.பிரபாகரன் மற்றும் பலர் உணர்வுபூர்வமாக தங்கள் கருத்தை எடுத்துரைத்தார்கள்.
நிகழ்ச்சியின் இடையே கராத்தே நிகழ்ச்சிகள் யாழினி, அன்புச்செல்வன், மதிவதனி மற்றும் சிவக்குமார் ஆகியோர் செய்து காண்பித்தார்கள்.
தொடர்ந்து சிலம்பம் செய்முறை நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கு.நிம்மதியின் மகன் நி.குடியரசு ஒற்றைக்கம்பு, அலங்கார சுற்று (20 அடி ரிப்பன் மற்றும் இரண்டு முனை ரிப்பன்), சுருள் வீச்சு ஆகியவற்றை மெய்சிலிர்க்க செய்து காண்பித்தார். அதனைத் தொடர்ந்து சிலம்பம் மாஸ்டர் ஆசான் குமார், 62 வயதுடன் இளைஞராக கவிஞர் பகுத்தறிவு தாசன் விரலில் கட்டுப் போட்டு உள்ள நிலையில் சிறப்பாக சிலம்பம் செய்முறை நிகழ்வோடு, எந்தப் பிடிமானமும் இல்லாமல் தலைகீழாக யோகா நிகழ்ச்சியும் செய்து காட்டினர். தொடர்ந்து வைரமுடி கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டும், நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்தும் கூடுதலாக தலைகீழாக நின்று யோகா நிகழ்வும் செய்து காட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக நிறைய பெரியார் பிஞ்சுகளும், ஆண்களும், பெண்களும் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகளில் குழந்தைகளுக்கான பலூன் ஊதி உடைத்தல் நிகழ்ச்சியில் முதல் பரிசு விஷ்வா, இரண்டாம் பரிசு இயற்கை, மூன்றாம் பரிசு பெருமை, பெண்களுக்கான பலூன் ஊதி உடைத்தல் நிகழ்வில் முதல் பரிசு ராஜகுமாரி, இரண்டாம் பரிசு அனிதா, மூன்றாம் பரிசு எழிலரசி,

ஆண்களுக்கான பலூன் ஊதி உடைத்தல் நிகழ்வில் முதல் பரிசு ஜில்ராஜ், இரண்டாம் பரிசு வழக்குரைஞர் பீ.ரமேஷ், மூன்றாம் பரிசு செல்வராசன் மற்றும் சிவக்குமார் ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேபோல இசை நாற்காலி விளையாட்டு நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான போட்டியில் முதல் பரிசு தமிழினி, இரண்டாம் பரிசு இயற்கை, மூன்றாம் பரிசு பெருமை,

பெண்களுக்கான நிகழ்வில் முதல் பரிசு எழிலரசி, இரண்டாம் பரிசு உதயா, மூன்றாம் பரிசு சங்கீதா, ஆண்களுக்கான நிகழ்வில் முதல் பரிசு வழக்குரைஞர் பீ.ரமேஷ், இரண்டாம் பரிசு ஜில்ராஜ், மூன்றாம் பரிசு குருமூர்த்தி ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி மற்றும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்கள்.
இவ்விழாவில் கழகத் தோழர்கள் திருநாகேஸ்வரம் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் கலியமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர் மோகன், இளைஞர் அணி பொறுப்பாளர் ரியாஸ், வலங்கைமான் பவானி சங்கர், நாச்சியார் கோவில் குணசேகரன், பாபநாசம் லெனின் பாஸ்கர், போட்டோ மகாதேவன், மாநகர செயலாளர் ந. காமராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்வராசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அரங்கம் தொடங்கி வீதி எங்கும் கழகக் கொடிகள் சிறப்பாக கட்டப்பட்டு அனைவரையும் வரவேற்கும் விதத்தில் அமைந்தது. மொத்தத்தில் குடும்ப விழா சிறப்போடு நடைபெற்றதுடன், அனைவரும் கழக உணர்வு மகிழ்ச்சியோடு மட்டுமல்லாமல் புது எழுச்சி யுடன் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்கு மாநகரத் தலைவர் க.சிவக்குமார் நன்றி கூறினார்.
