பெங்களூரு மூத்த பெரியார் பெருந்தொண்டருக்கு வாழ்த்து

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெங்களூரு, அக்.4- பெங்களூரு சம்பங்கி ராம் நகர் பகுதியில் வாழ்விடத்தில் வாழும் பெரியார் பெருந்தொண் டர் மூத்த கழக உறுப்பினர் பு.ர.கஜபதி அவர்களின் வாழ்விணையர் பு.ஜெயலட்சுமியின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் 29.9.2026 அன்று மூன்று மகன்களுடன் இணையர் பேரன், கொள்ளுப்பேரன் பேத்திகள் நிறைந்த மூன்று தலைமுறைகள் புடை சூழவும், கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சே.குணவேந்தன், செயலாளர் இரா.முல்லைக்கோ கலந்து கொண்டனர். ஜெய லட்சுமி அம்மையார் வண்ணமிகு கேக் கினை பலத்த கரவொலிக்கி டையே வெட்டி சிறப்பித் தார். கழகத்தின் சார்பில் தலைவர் சே.குணவேந்தன், தலைமைக் கழகம் வெளியிட்டு வழங்கிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் இனிப்பு பெட்ட கத்தினை வழங்கி மகிழ் வினை தெரிவித்தார். அனைவருக்கும் சிற்றுணவு வழங்கி, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 அளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *