சேலம் மாவட்டக் கழகம் நடத்திய தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – கொள்கைக் குடும்ப விழா

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சேலம், அக். 4- 17 – செப்டம்பர் சமூகநீதி நாள் – அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – பெரியார் கொள்கைக் குடும்பங்கள் ஒன்று கூடுகை விழாவும், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளும், சேலம் மாவட்ட கழகச் செயலாளர் மூணாங்கரடு பெ. சரவணனும், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வழக்குரைஞர் ச.சுரேஷ்குமாரும் இணைந்து வரவேற்க, சேலம் மாவட்ட கழகத் தலைவர் வீரமணி ராஜூவும், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வழக்குரைஞர் வேல்.சோ. அசோகனும் இணைந்து தலைமையேற்க, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வழங்கினார்.

காப்பாளர்கள் கி.ஜவகர் – சேலம் மாவட்டம், பழனி புள்ளையண்ணன் – மேட்டூர் கழக மாவட்டம், கவிஞர் சிந்தாமணியூர். சுப்பிரமணியம் – மேட்டூர் கழக மாவட்டம், த. வானவில் – ஆத்தூர் கழக மாவட்டம், மேட்டூர் கழக மாவட்ட தலைவர் கா.நா. பாலு, செயலாளர் ப.கலைவாணன், ஆத்தூர் கழக மாவட்டத் தலைவர் அ. சுரேஷ், செயலாளர் நீ.சேகர், திருச்செங்கோடு கழக மாவட்டத் தலைவர் சு.சரவணன், மேட்டூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் எடப்பாடி கோவி அன்புமதி, செயலாளர் சி.மதியழகன்,பொதுக்குழு உறுப்பினர் க.கமலம், கல்பாறைப் பட்டி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அறிவாசான் தந்தை பெரியார் கொள்கை குடும்பங்கள் கூடுகை நிகழ்வில் 190 தோழர் தோழியர் கலந்து கொண்டு முக்கியமாக சந்திப்புகள் அனைவருடன் ஏற்படுத்திக் கொண்டனர். கலந்து உரையாடி மகிழ்ந்து, கடந்த ஓராண்டு வாழ்வின் நிகழ்வுகளை கூடிக் கூடி பகிர்ந்து கொண்டனர்.

அதே நேரத்தில் 90 பள்ளி சிறார்கள் பங்கேற்ற ஓவியப் போட்டியும் தொடர்ந்து பேச்சுப் போட்டியும் மதியம் வரை நடந்தது.

மதிய உணவிற்கு பின் மாலை 5:00 மணி வரை 16 கல்லூரி மாணவ மாணவியர்களின் பேச்சுப்போட்டி நடந்தது.

முன்னரே நடந்த ஓவி யப் போட்டியில் ஓவிய ஆசிரியர் சுரேசும், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராம னும் நடுவர்களாக இருந்து 90 மாணவ மாணவியரை 4 பிரிவாக பிரித்து அதில் முதல் பிரிவு (எல்.கே.ஜி-3 ஆம் வகுப்பு) – முதல் பரிசு, எஸ். மிருதுலா -3ஆம் வகுப்பு – குகை நர்சரி பிரைமரி பள்ளி.

இரண்டாம் பிரிவு (4-ஆம் வகுப்பு – 6ஆம் வகுப்பு) ஏ. தன்யசிறீ – 6ஆம் வகுப்பு – ஜோதி மெட்ரிக் பள்ளி மூன்றாம் பிரிவு (7-ஆம் வகுப்பு-9ஆம் வகுப்பு) – 2 முதல் பரிசு- ஆர்.வி. குருநாதன்-9ஆம் வகுப்பு-அரசு மேல்நிலைப்பள்ளி சேலம், ஜே யோகேஸ்வரன்-9ஆம் வகுப்பு-முதல் பரிசு-குகை மேல்நிலைப்பள்ளி, நான்காம் பிரிவு (10ஆம் வகுப்பு – +2 வரை) முதல் பரிசு, வி. சுதர்சன்- 10ஆம் வகுப்பு – குகை மேல்நிலைப்பள்ளி – அய்வருக்கும் ரூபாய்கள் 500 என 5 முதல் பரிசுகள் அளிக்கப்பட்டன. பரிசுகளுடன் “தந்தை பெரியார் அவர்கள் கேட்ட 148 கேள்விகள்” என்ற புத்தகங்களையும், காப்பாளர் பழனி புள்ளையண்ணனும், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமனும், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூவும் கொடுத்தனர்.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்பாளர் மாயக் கண்ணனும், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.முருகானந்தனும், மேட்டூர் கழக மாவட்ட தலைவர் கானா பாலுவும், மேட்டூர் பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் அன்புமணியும் நடுவர்களாக இருந்து முதல் பரிசை ஏ. தன்யசிறீ – 6ஆம் வகுப்பு – ஜோதி மெட்ரிக் பள்ளிக்கும், இரண்டாம் பரிசை இள நிலவன் – 9ஆம் வகுப்பு – வையாபுரி தெரு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், மூன்றாம் பரிசு சிறீவர்ஷினி – 6-ஆம் வகுப்பு – வையாபுரி தெரு அரசு மேல் நிலைப் பள்ளிக்கும் என தேர்வு செய்தனர்.

பரிசாக ரூபாய் 500 மற்றும் பெரியார் கேட்ட 148 கேள்விகள் என்ற புத்தகமும் ஒவ்வொருவருக்கும் வழங்கப் பட்டது

கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியை மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் இயக்குநர் மாரி கருணாநிதிவும், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூவும், ஆசிரியைகள் மூவரும் நடுவர்களாக இருந்து முதல் பரிசு – எஸ். சக்தி 2- பி.இ.மெக் – அரசு பொறியியல் கல்லூரி சேலம், இரண்டாம் பரிசு – பி. தேவதர்ஷினி – 4ஆவது பி.ஏ.எல்.எல்.பி – அரசு சட்டக் கல்லூரி சேலம், மூன்றாவது பரிசு – என்.பொன்மணி – 3ஆவது பி.எஸ்.சி வேதியியல். ஆகியோருக்கு முறையே ரூ.2000, 1000, 500 என பரிசுத் தொகையையும் தந்தை பெரியார் அவர்கள் கேட்ட 148 கேள்விகள் எனும் புத்தகங்களையும் காப்பாளர் பழனி புள்ளையண்ணனுளும், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமனும் வழங்கி நிகழ்வை சிறப்பித்தனர். இறுதியாக சேலம் மாவட்ட துணைத் தலைவர் சு. இமய வரம்பன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *