‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ வாசகர் வட்டத்தின் சார்பில் 28.09.2026 அன்று நடைபெற்ற இரு ஆங்கிலப் புத்தகங்கள் அறிமுக விழாவில் ‘The Cambridge Companion to PERIYAR’ (தொகுப்பாசிரியர்கள்: ஆ.இர. வேங்கடாசலபதி, கார்த்திக் ராம் மனோகர்) புத்தகத்தை மூத்த வழக்குரைஞரும், தமிழ்நாடு அரசின் மேனாள் அட்வகேட் ஜெனரலுமான ஆர்.சண்முகசுந்தரம் அவர்களும், ‘The People’s Sanctum’ The 100-years Struggle to Democratize Temples in India (ஆசிரியர்: வழக்குரைஞர் மனுராஜ் சண்முகசுந்தரம்) புத்தகத்தை ஆய்வாளர் எழுத்தாளர் பழ. அதியமான் அவர்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். நூலாசிரியர்கள் ஆய்வாளர் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி, வழக்குரைஞர் மனுராஜ் சண்முகசுந்தரம் ஆகியோருக்குத் தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்.
‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ (The Modern Rationalist) வாசகர் வட்டம் தந்தை பெரியார் மற்றும் இயக்கம் பற்றிய சிறப்பு நூல்கள் வெளியீட்டு விழா
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
