தந்தை!

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

உன்
மனக்குகையில்
சிறுத்தை எழும் என்று
பாவேந்தர் எதற்குப்
பாடவேண்டும்?

ஜாதி ஒழிப்பில், நீ
சிரத்தை
கொண்டதாலா!

உன்
மண்டைச் சுரப்பை
உலகுதொழும்
என்று ஏன்
மொழிய வேண்டும்?

ஆட்சியாளனும்
ஆட்டிடையனும்
சமமெனும் உன்
கொள்கையினாலா?

தொண்டு செய்து
பழுத்த பழம் என்று
உன்னை ஏன் அவர்
கூற வேண்டும்?

முதுமையிலும்
மூத்திரப்பை சுமந்து
முச்சந்தியெங்கும்
மனிதத்தை
முழங்கினாயே
அதனாலா?

அது போகட்டும்
தந்தை பெரியார்
என்று நாடு ஏன்
போற்ற வேண்டும்?

பகுத்தறிவித்தல்
தந்தைக் கடன்
என்பதாலா?

– கம்பம் மீரான்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *