மேனாள் அமைச்சர்கள் எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு, பனைமரத்துப்பட்டி ராேஜந்திரன், மேயர் பிரியா, கிருஷ்ணசாமி, பி.எச்.சத்தியசாய், வேட்பாளர் வழக்குரைஞர் இ.பரந்தாமன் மற்றும் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். வேட்பாளர் இ.பரந்தாமனுக்கு கழகப்பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேனாள் அமைச்சர் மா. சுப்பிரமணியம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், அ.வெ. முரளி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தனர்.
செங்கல்பட்டு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தாம்பரம் ப.முத்தையன், அ.செம்பியன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
