விழுப்புரம், அக். 2- திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்த நாளினை முன்னிட்டு 27.09.2026 அன்று காலை 8.00 மணியளவில் விழுப்புரம் மாதா கோயில் பேருந்து நிலையத்தில் இருந்து மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் தலைமை வகிக்க, திமுக ரவிகார்த்திகேயன் திராவிடர் கழகக் கொடி அசைத்து நடைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
நடைப் பயணத்தில் விழுப்புரம் மாவட்டக் கழகத் தலைவர் அரங்க.பரணிதரன், மாவட்டச் செயலாளர் ஏ.இரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
‘பெரியார் நடைப் பயணம்’ ரயில் நிலையம் அடுத்த காந்தி சிலை வழியாக தந்தை பெரியார் சிலையை அடைந்து அங்கிருந்து புதிய பேருந்து நிலையம் நகராட்சித் திடலில் 5 கி.மீ பயணித்து 10 மணியளவில் நிறைவடைந்தது. திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன் நிறைவாக உரையாற்றினார்.
தலைமை வகித்த மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து கூறி பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். விழுப்புரம் நகரத் தலைவர் இராஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.
இந்தப் பெரியார் நடையில் மாவட்டக் கழகக் காப்பாளர்கள் கொ.பூங்கான், சே.வ.கோபண்ணா, மாவட்டத் துணைத் தலைவர் அ.சதிஷ், மாவட்ட இணைச் செயலாளர் சு.மாறன், மாவட்ட துணைச் செயலாளர் ச.தண்டபாணி, பகுத்தறிவாளர் கழக ர.முரா.இளங்கோவன், ஆசிரியர் பகவான்தாஸ், கண்டாச்சிபுரம் நகர தலைவர் நாகராஜ், நகர செயலாளர் முருகன், க.சிவராமன், கணேசன், ஒரத்தநாடு-நெல்லுப்பட்டு நாகராஜ், பெரியார் பிஞ்சு மகிழ்நன், மக்கள் அதிகாரம் தோழர்கள் அரசு, முரளிதரன், கழக மகளிரணி ஜெகதீஷ்வரி, கழக இளைஞரணித் தோழர் மணிராஜ், திராவிட மாணவர் கழகத் தோழர்கள் எதிஸ்ட், சிவன்ராஜ், பிரபாகரன், நிதிஷ்குமார், ராஜு, கவியரசன், இன்பத்தமிழன், அகிலன் மற்றும் பொது மக்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
விழுப்புரத்தில் சமூகநீதி சமத்துவத்திற்கான பெரியார் நடை
Leave a Comment
