தாம்பரத்தில் (25.8.2026) ஆசிரியர் வீரமணி அய்யா கூட்டம், ‘நீட்’ எதிர்ப்பு வாகன ஊர்வல பரப்புரைக் கூட்டம் தாம்பரத்தில் முடிகிறது. தோழர்கள் அருமையாகப் பேசினார்கள். ஆசிரியர் அய்யாவிற்கு வயது 93. இன்றும் கணீரென்று ‘நீட்’ பற்றி, அதன் நோக்கம், சூட்சுமம், மேல் வர்க்கத்தினரின் தில்லுமுல்லு எல்லாவற்றையும் விரிவாகப் பேசினார்.
வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் சிறப்பாக பேசினார். குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும், அவர் பேசிக் கொண்டிருக்கும்போது சண்முகம் சாலையில் உள்ள மசூதியில் இருந்து பாங்கு ஓதினார்கள். அவர்கள் முடிக்கும் வரை தன் உரையை நிறுத்தினார். கடவுள் மறுப்பாளராக இருந்தும் பிற மதத்தினரின் செயல்பாடுகளுக்கு மரியாதை கொடுப்பது திராவிடர் கழகத்தாரால்தான் முடியும்.
திராவிடர் கழகம் ஒன்றுதான் எந்தவித எதிர்ப்பார்ப்பும், அரசியல், தேர்தல் பதவி – எவ்வித ஆசையுமின்றி மக்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக விழிப்புணர்வுப் பெற பாடுபடுகிறது. அதில் இளைஞர்கள் இப்போது அதிகம் பங்கு பெறுவது பாராட்ட வேணடியதாக இருக்கிறது.
‘சொல்கேளான்’ ஏ.வி. கிரி
முகநூல் பதிவு…
