
புதுச்சேரி, அக். 2- புதுச்சேரி ‘விடுதலை’ வாசகர் வட்டம் சார்பில் அண்மையில் மறைந்த திராவிடர் இயக்கத் தோழர்கள் புதுச்சேரி பிலால் உணவக உரிமையாளர் அ.ச.முகமது நிசாம், மூலைக்குளம் மு.பா.நடராசன், வெண்பா கீரப்பாளையம் அ.வீரசேகர் ஆகியோரின் படத்திறப்பு, மலர் தூவி மரியாதை – நினைவேந்தல் நிகழ்வு 29.09.2026 அன்று மாலை 6.30 மணியளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை ‘விடுதலை’ வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்து மறைந்த பெரியார் பெருந் தொண்டர்களை நாம் ஏன் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதற்கான செய்திகளை எடுத்துக்கூறி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார். புதுச்சேரி மாவட்ட கழகச் செயலாளர் தி.இராசா வரவேற்புரையைத் தொடர்ந்து காப்பாளர் இர.இராசு முன்னிலை உரையாற்றினார்.
மறைந்த அ.ச. முகமது நிசாம் படத்தை புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மு.பா.நடராசன் படத்தை புதுச்சேரி மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன், அ.வீரசேகர் படத்தை உலகத் தமிழர் பேரமைப்பு பொதுச் செயலாளர் ந.மு.தமிழ்மணி ஆகியோர் திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் ஜீனோ மாறன் பில்டர்ஸ் மேலாண்மை இயக்குநர் ச.தங்கமணிமாறன், விரிவுரையாளர் அபிமன்னன், மூலைக்குளம் இரா.சவுந்தரராசன், அரியாங்குப்பம் வீராசாமி, புதுச்சேரி ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் வி.கலைவாணன், மு. ரித்துலா நிசாம், வெ.அமுதா நிசாம் உட்பட பலர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தன்னுடைய தலைமை உரையில் 45 ஆண்டு களுக்கு முன்பு புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவராக இருந்த மறைந்த கனகலிங்கம் காலம் தொடங்கி இன்றைய தலைவராக இருக்கும் சிவ.வீரமணி காலம் வரை உள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிப் பற்றிய தன்னுடைய பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். மூன்று பெரியார் பெருந் தொண்டர்கள் முறையே அ.ச. முகமது நிசாம், மு.பா.நடராசன், அ.வீர சேகர் ஆகியோரின் இயக்கச் செயல்பாடுகள் பற்றியும் அவர்கள் கடந்து வந்த போராட்டப் பாதைகளின் தன்னோடு பயணித்த நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்தார். 50 நிமிட உரைக்கு பிறகு மரித்துப் போன அந்த மாவீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் ஒரு நிமிடம் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார். அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதி காத்தனர். வீரவணக்க முழக்கத்துடன் வந்திருந்த அனைவரும் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த மூவரின் படங்களுக்கும் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினர்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி திராவிடர் கழகத் துணைத் தலைவர் மு.குப்புசாமி, துணைச் செயலாளர் ஜீவன் சார்வாகன், பொதுக்குழு உறுப்பினர் கி.அறிவழகன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.குமரன், இரா.சத்தியராஜ், தொழிலாளரணி துணைத் தலைவர் தானி. இரா.திருநாவுக்கரசு, நகராட்சி கழகப் பொறுப்பாளர்கள் எஸ்.கிருஷ்ணசாமி, மு.ஆறுமுகம், ஏம்பலம் தெ.தமிழ்நிலவன்,இரா.நா.முத்துவேல், கலைப் புலி சங்கர், தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், அண்ணா பேரவைத் தலைவர் சிவ.இளங்கோ, இள.கோவலன், தீனா, வீர.மோகன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையப் பொறுப்பாளர் பாவலர். தலையாரி, கோகுல் காந்தி நாத், கோ.கலியுகன், புதுவைத் தமிழ்ச் சங்கப் பொருளாளர் பொறிஞர். பாலசுப்பிரமணியன், இயக்குநர் க.திருநாவுக்கரசு பாகூர் பாவேந்தர் இலக்கியப் பாசறை இரா.தாமோதரன், இராம.சேகர், தலைமை ஆசிரியர் குப்புசாமி, அமிர்தலிங்கம், ச.பாலமுருகன், பியர், வில்லியனூர் இரா.கலைமணி, இர.சாம்பசிவம், ப.சுரேஷ், திருக்குறள் சண்முகம், இளையரசன், சிவக்குமார், ஜெ.ஜெயந்தி, ஜெ.கணேஷ், விழுப்புரம் நகர கழகச்ச் செயலாளர் இராசேந்திரன், வடலூர் நகர கழக அமைப்பாளர் முருகன், கடலூர் கம்மாபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் பாவேந்தர் விரும்பி, ஜிப்மர் குணசேகரன், தமிழர் தையலகம் இரா.சந்திரசேகர், மறைந்த நடராசனின் பெயர்த்தி, மருமகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார். மறைந்த தோழர்களின் உறவினர்கள் குழுப் படங்கள் எடுத்துக் கொண்டனர் மேலும் திராவிடர் கழகத்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
