செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாளில் ஆத்தூர் நகர இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ‘விடுதலை’ வாசகரும், பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேலாகத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தனது நன்கொடையாகத் தந்து – ஆத்தூரில் நடைபெறும் திராவிடர் கழகக் கூட்டங்களுக்கு நன்கொடை வழங்கி ஊக்கம் தந்தவருமான ஆர்.ஓசுமணியின் மகளின் மணவிழாவிற்குச் சென்று தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலினையும் பெரியார் பிறந்தநாள் இனிப்புப் பெட்டியும் வழங்கி கழகத் தோழர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
