திருவெறும்பூர், அக்.2- தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாளை ஒரு மாத காலம் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக் கொண்டதற் கிணங்க, செப்டம்பர் 17 முதல் தமிழ்நாடு முழுவதும் உற்சாகக் கொள்கைத் திருவிழா களைகட்டி வருகிறது.
தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், கழகத் தோழர்களின் இல்லங் களுக்குச் சென்று கொடி ஏற்றுதல், உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு, காரம் வழங்கி மகிழ்வித்தல், பெரியார் நடை என “மினி மாரத்தான்” நடத்துதல், பெரியார் கேட்கும் கேள்விகள் எனும் சிறிய நூலை, பெரியளவில் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தல், முத்தாய்ப்பாகக் கழகக் குடும்பச் சந்திப்பைக் திருமண மண்டபங்கள் பிடித்து, 3 வயது கருப்புச் சட்டை முதல் 100 வயது கருப்புச் சட்டை வரை கலந்து கொண்டு குடும்பம், குடும்பமாய் குதூகலித்து மகிழ்தல் ஆகிய தொடர் நிகழ்ச்சிகளால் தமிழ்நாடே உணர்வுமயம் பெற்றுள்ளது.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் 27.09.2026 அன்று, பெரியார் பட ஊர்வலமும், கழகத் தோழர்களின் வீடு களில் கொடியேற்று நிகழ்ச்சி யும் நடைபெற்றது. காலை 8 மணிக்குக் காட்டூர் பகுதியில் தொடங்கி, பிற்பகல் 3 மணிக்குச் சோழமாதேவி பகுதியில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் தோழர்கள் குடும்பம், குடும்பமாக இருசக்கர வாகனத்தில் பயணித்து வந்தனர். ஒவ்வொரு தோழர்கள் இல்லத்திலும் இனிப்பு, காரம், தேநீர், குளிர்பானங்கள், உணவு என மிகச் சிறப்பாக ஏற் பாடு செய்திருந்தனர்.
சற்றொப்ப 25 கிலோமீட்டர் பயணம் செய்த இந்தப் பகுத் தறிவுப் பயணத்தில் மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தொழிலாளரணி மாநிலச் செயலாளர் மு.சேகர், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் வி.சி.வில்வம், சிவானந்தம், நிர்மலா, சங்கிலிமுத்து, இராஜேந்திரன், கனகராஜ், பாலசுப்பிரமணியன், காமராஜ், இராமச்சந்திரன், புனிதா, கியூபா, கணேசன், பாலகங்காதரன், தாமஸ், அசோக்குமார், புனிதவதி, அன்புலதா, தமிழ்கவி, பாண்டியன், ரூபா, ஸ்டாலின், ரெஜினா, பால்ராஜ், தமிழ்ச்சுடர், ஆறுமுகம், பாண்டிக்குமார், மெர்வின் பிரபு, பஞ்சலிங்கம், விஜய் யோகானந்த், அன்பழகன், விடுதலை கிருஷ்ணன், முருகன், விஜயா, வெற்றிமணி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்குபெற்றனர்.
