கொல்கத்தா, அக்.2 மம்தா பானா்ஜி காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும்; மேற்கு வங்கத்தில் அவரது தலைமையில் செயல்படத் தயாராக இருக்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் சவுத்தரி தெரிவித்தார்.
1998-ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய மம்தா, அரசியலில் படிப்படியாக வளா்ந்து மேற்கு வங்க முதலமைச்சராக தொடா்ந்து 15 ஆண்டுகள் பதவி வகித்தார். கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் தோல்வியடைந்தார். அதன் பிறகு அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி அணி தொடங்கியது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல் என பெரும் அரசியல் சரிவைச் சந்தித்து வருகிறார். அவா் உருவாக்கிய கட்சியின் பெயா், சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
அவரின் அணி வேட்பாளா் பாஜகவுக்கு தாவியதால் நந்தி கிராம் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தாமாக முன்வந்து காங்கிரஸ் வேட் பாளரை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்நிலையில், கொல்கத் தாவில் நேற்று (1.10.2026) செய்தி யாளா்களைச் சந்தித்த மேற்கு வங்க மாநில முன்னாள் காங் கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சவுத்தரி கூறியதாவது:
மம்தா உருவாக்கிய திரிணா மூல் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு இக்கட்டான நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் பாஜகவை எதிர்க்க தனியாக அணி தேவையில்லை. எனவே, தனக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மம்தா காங்கிரஸில் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை காங்கிரஸ் தலைமைக்கும் ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன். மேற்கு வங்கத்தில் மம்தாவின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியினா் செயல்படத் தயாராகவே இருக்கிறோம். மம்தா தனது சுமைகளை (மம்தாவின் நெருங்கிய உறவினரும், கட்சி யின் பொதுச் செயலருமான அபிஷேக்கை குறிப்பிடுகிறார்) விட்டுவிட்டு வர வேண்டும்.
நந்திகிராம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித் துள்ள மம்தா பானா்ஜி, ரெஜிநகா் தொகுதியிலும் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இது தொடா்பாக மம்தா கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற சவுகதா ராய் கூறுகையில், ‘அதீா் ரஞ்சன் சவுத்தரி தனது தனிப்பட்ட கருத்தைக் கூறி யுள்ளார். இதில் நாங்கள் கருத்துக் கூற ஏதுமில்லை. திரிணாமூல் காங்கிரஸ் தனிக்கட்சியாகவே உள்ளது. காங்கிரஸ் தலைமை விரும்பினால் அவா்கள் அதிகார பூா்வமாக இணைப்புக்கு அழைப்பு விடுக்கலாம். அப்போது நாங்கள் அது குறித்து விவாதிப் போம். எங்கள் கட்சி ‘இண்டியா’ கூட்டணியின் முக்கிய அங்கமாக இப்போது உள்ளது. அபிஷேக் இல்லாமல் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை’ என்றார்.
காங்கிரஸில் இணைய மம்தாவுக்கு அழைப்பு
Leave a Comment
