தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக்.1 தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனக்குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் என ஒன்றிய அரசு திருத்தியது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி தீபங்கர் தத்தா, சதிஷ் சந்திரா சர்மா உள்ளிட்டோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த மனுவை அரசியலசாசன அமர்வுக்கு மாற்றுவதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே அந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது.

இந்த விவகாரத்தில் ஜெயா தாகூர் என்பவர் நிவாரண மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான சதிஷ் சந்திரா சர்மாவின் மகன் சித்தார்த் சர்மாதான் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞராக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் சார்பாக சித்தார்த் சர்மா ஆற்றும் தொழிலுக்கும், நீதிபதி சதிஷ் சந்திரா சர்மாவால் தேர்தல் ஆணையர்களின் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்குவதற்கும் இடையே நேரடியான முரண்பாடு உள்ளது என மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இந்த அமர்வு வழங்கிய தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும் என அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *