இந்திய அணைகளில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் சரிவு!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக்.1 தென்மேற்குப் பருவமழை நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், நாட்டின் முக்கிய 178 அணைகளில் உள்ள நீர் இருப்பு அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 70 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஒன்றிய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி நீர் இருப்பை விட் குறைவாகும்.

தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வழக்கத்தை விட 12 சதவீதம் குறைவான மழையே பதிவாகியுள்ளது. குறிப்பாக பசிபிக் பெருங்கடலில் உருவான எல் நினோ காரணியின் வலுவான தாக்கத்தால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீண்ட வறண்ட வானிலையும், தீவிர மழைப் பற்றாக்குறையும் நிலவியது. இதன் காரணமாகக் நாட்டின் பல பகுதிகளில் வறட்சிச் சூழல் உருவாகியுள்ளது.

ஒன்றிய நீர் ஆணையத்தின் அறிக்கையின்படி, தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள 92 அணைக ளின் நீர் இருப்பு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. தென்னிந்திய அணைகளில் கடந்த ஆண்டு 87.25 சதவீதமாக இருந்த நீர் இருப்பு, தற்போது 50 சதவீதமாக சரிந்துள்ளது. இப்பகுதியில் பருவமழை வழக்கத்தை விட 23 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

அதேபோன்று வட மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பு 62 சதவீதமாகவும், கிழக்கு மாநிலங்களில் 73 சதவீதமாகவும் குறைந்துள்ளது. நீர் இருப்பு கணிசமாக குறைந்துள்ளதால், வரவிருக்கும் காலங்களில் குடிநீர் விநியோகம், பாசனம் மற்றும் நீர்மின் உற்பத்தியில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *