கல்விக் கூடங்களில் சுகாதார வசதிகள் இல்லாமல் 5 கோடி இந்திய குழந்தைகள்! உலக சுகாதார அமைப்புத் தகவல்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப். 29- உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் யுனிசெப் (UNICEF) ஆகிய அமைப்புகள் இணைந்து கூட்டு கண்காணிப்புத் திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையின்படி, உலக அளவில் பள்ளிகளில் சுகாதார வசதிகள் இல்லாத குழந்தைகளில், சுமார் அய்ந்தில் ஒரு பங்கு குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர் என்றும், இது உலகின் எந்தவொரு நாட்டையும் விட அதிக எண்ணிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த முன்னேற்றம் 2015-2025’’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில் உலக அளவில் பள்ளிகளில் சுகாதார வசதிகள் இல்லாத 24.4 கோடி குழந்தைகளில் சுமார் 5 கோடி குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல், நைஜீரியாவில் 3.4 கோடி, எத்தியோப்பியா 2.6 கோடி, காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1.1 கோடி மற்றும் இந்தோனேசியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு தங்களது பள்ளி களில் சுகாதார வசதிகள் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அய்க்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகியவற்றின் கூட்டு கண்காணிப்புத் திட்டமானது, குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான முன்னேற்றம் குறித்த பன்னாட்டளவிலான மதிப்பீடுகளை உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *