ஜம்மு – காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கோரி சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சிறீநகர், செப். 29-  ஜம்மு – காஷ்மீருக்கு தன்​னாட்சி அதி​காரத்​துடன் கூடிய மாநிலத் தகுதி வழங்க வேண்​டும் என்று கோரி சட்​டப்​பேர​வையில் நேற்று (28.9.2026) தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்​கான சிறப்புத் தகுதி (சட்டப்பிரிவு 370) நீக்​கப்​பட்​டது. மேலும் ஜம்மு – காஷ்மீர், இரு யூனி யன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டது.

இதன்​படி ஜம்மு –காஷ்மீர் சட்​டப்​பேர​வையுடன்​கூடிய யூனியன் பிரதேச​மாக​வும், லடாக் பகுதி சட்​டப்​பேரவை இல்​லாத யூனியன் பிரதேச​மாக​வும் உதய​மாகின. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்​தது.

முதலமைச்சர் உமர் அப்​துல்​லா, ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநிலத் தகுதி வழங்க வேண்​டும் என்று கோரி வரு​கிறார். இதுதொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் நேற்று (28.9.2026) சிறப்புத் தீர்​மானம் நிறை வேற்​றப்​பட்​டது. இதில் 1953 ஆம் ஆண்​டுக்கு முந்​தைய அரசி​யலமைப்புத் தகுதி வழங்க வேண்​டும் என்று கோரப்​பட்டு உள்​ளது.

அதாவது பாது​காப்​பு, வெளி​யுறவு
கொள்​கை, கரன்சி உள்​ளிட்ட முக்​கிய விவ​காரங்​களை தவிர்த்து இதர அனைத்துத் துறை​களி​லும் காஷ்மீர் அரசு தன்​னிச்​சை​யாக முடிவு எடுக்க அதி​காரம் வழங்க வேண்​டும் என்று தீர்​மானத்​தில் கோரப்​பட்டு உள்​ளது. மேலும் சட்டப்​பிரிவு 370 மற்​றும் 35-அய் மீட்​டெடுக்க வேண்​டும் என்​றும் வலியுறுத்​தப்​பட்டு உள்​ளது.

ஜம்மு – காஷ்மீருக்​கான மாநில அந்​தஸ்து கோரிக்​கைக்கு பாஜக முழு ஆதரவு தெரி​வித்து உள்​ளது. ஆனால் தன்​னாட்சி அதி​காரம் மற்​றும் சிறப்புத் தகுதி மீண்​டும் கோரு​வதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இதுதொடர்​பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அனை​வரும் நேற்று (28.9.2026) சட்​டப்​பேர​வை​யின் மய்யப் பகு​தி​யில் கூடி தீர்​மானத்​துக்கு எதி​ராக குரல் எழுப்​பினர். அமளியில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களை வெளி​யேற்ற பேரவைத் தலைவர் அப்​துல் ரஹீம் ரத்​தர் உத்​தர​விட்​டார்.

இதன்பேரில் 4 சட்டமன்ற உறுப்பி னர் களை​ அவைக் காவலர்​கள் வெளியேற்றினர். இதன்​பிறகு சட்​டப்​பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

இதுகுறித்து சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் சுனில் சர்மா கூறிய​தாவது:

ஜம்மு – காஷ்மீருக்கு உரிய நேரத்​தில் மாநிலத் தகுதி வழங்​கப்​படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்​சர் அமித்ஷா உறுதி அளித்​துள்​ளார். அவர் அளித்த வாக்​குறு​தியை நிச்​ச​யம் நிறைவேற்​று​வார். காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கிடைக்க பாஜக முழு ஆதரவு அளிக்​கிறது.

ஆனால், இதைச்  சீர்​குலைக்​கும் வகை​யில் சட்​டப்​பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது. தன்​னாட்சி அதி​காரம் கோரி கடந்த 2000 ஆம் ஆண்​டில் முன்​னாள் முதலமைச்சர் பரூக் அப்​துல்லா காலத்​தில் பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. தற்​போது அது​போன்ற தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டிருப்​பதை மிக​வும் வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம். இது நாட்டு நலனுக்கு எதிரானது.

இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறும்​போது, “தீவிரவாதம் முழுமையாக  ஓய்ந்த பிறகே காஷ்மீருக்கு மாநிலத்  தகுதி வழங்கப்படும் என்று ஒன்றிய​ அரசு கூறு கிறது. இதை ஏற்க முடியாது. உடனடியாக மாநிலத் தகுதி வழங்கவேண்டும்​” என்று தெரிவித்தார்​.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *