டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* “என்.டி.ஏ-வில் இணையும் திட்டம் இல்லை” – சரத் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சி (SP), மகாராட்டிராவில் சுயாதீனமாக செயல்படும் என்றும், எந்தக் கட்சியுடனும் இணையாது என்றும் சரத் பவார் தெரிவித்தார்.
தி இந்து:
* “பீகார் அரசில் அங்கம் வகிப்பதற்கே வெட்கப் படுகிறேன்” – எல்.ஜே.பி. கட்சித் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பாஸ்வான்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, ஜமுய், சமஸ்திபூர், பாங்கா உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லை சம்பவங்களை சிராக் பாஸ்வான் கண்டித்தார்; குற்றவாளிகள் குற்றம் செய்யவே அஞ்சும் அளவுக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.
தி டெலிகிராப்:
* 48 மணி நேரமாக பந்து ஞானேஷ்குமார் பக்கம் இருந்தது; இப்போது அது எங்கள் (CJP) பக்கம் உள்ளது. அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்குவோம்; அவர் பதவி விலகும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அசுதோஷ் ரங்கா சூளுரை.
* முழு உண்மைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு, எஸ்.அய்.ஆர்.இன் மூன்றாம் கட்டத்தை கைவிட வேண்டும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா. அரசின் அனுமதியின்றி படிவம் 6இல் மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் மற்றும் மேற்கு வங்கத்தின் “மர்மம்” குறித்து தேர்தல் ஆணையம் முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என அசோக் லவாசா பேட்டி
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “அனைத்து தொகுதிகளிலும் வென்றாலும் வாக்கு எந்திரங்களை நாங்கள் எதிர்ப்போம்” – அகிலேஷ், மாயாவதி பேச்சு. அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப் படுவதாக அகிலேஷ் சுட்டிக்காட்டினார்.
– குடந்தை கருணா
