சர்.ஜான் மார்ஷல் சிலையல்ல, நமக்கு வழிகாட்டியாக இருக்கிற ஒரு சீலம்! அவரது சிலைக்கு மாலையணிவித்த தமிழர் தலைவர் ‘கலைஞர்’ தொலைக்காட்சிக்குத் அளித்த நேர்காணல்!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப்.29 சர்.ஜான் மார்ஷல் சிலையல்ல, நமக்கு வழிகாட்டியாக இருக்கிற ஒரு சீலம்! என்று அவரது பிறந்த நாளில் (22.9.2026) எழும்பூர் கலையரங்கத்தில் உள்ள சிலைக்கு மாலையணிவித்த தமிழர் தலைவர் ஆசிரியர் ‘கலைஞர்’ தொலைக்காட்சிக்குத் அளித்த நேர்காணல் வருமாறு:

சிந்துவெளி நாகரிகம் என்ற சிறப்பான நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை உலகுக்கே அறிவித்த ஒரு பெரிய தொல்லியல் ஆய்வறிஞர் தொல்லியல் துறையிலே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு அரிய தொண்டினை செய்த சர்.ஜான் மார்ஷல் அவர்களுடைய, 150 ஆம் பிறந்தநாள் விழாவை ஒட்டி, மீண்டும் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை தடுத்து நிறுத்த, இதுபோன்ற நினைவுகளும், நிகழ்ச்சிகளும், விழாக்களும் தேவை என்ற அடிப்படையிலேதான் இதைச் செய்கிறோம்.

‘திராவிட மாடல்’ ஆட்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சர் ஜான் மார்ஷல் அவர்களுக்கு சிலை நிறுவி, வரலாற்றிலே ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்த்தார்கள். வேதகால நாகரிகம்தான் முந்திய நாகரிகம் என்ற வரலாற்றுப் புரட்டை உடைத்துக்காட்டி, இல்லையில்லை திராவிட நாகரிகம்தான் சிந்துவெளி நாகரிகம்தான் முந்தியது என்பதையும், ஆடு, மாடு மேய்த்துக்கொண்டு மேய்ச்சல் நிலத்தைத் தேடி வந்தவர்கள் நிரந்தரமானவர்கள் அல்ல. அவர்கள் குடியேறிகள்தான்; வந்தேறிகள்தான் என்பதை மறைமுகமாக அல்ல, நேரிடையாகவே ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இன்றைக்கும் கீழடி போன்றவை தொடர்ச்சியான சான்றுகளாக இருந்துகொண்டிருக்கின்றன. அப்படிப்பட்டவரின் சிறப்பான நிகழ்ச்சியை அறிஞர்கள் பால கிருஷ்ணன், பேராசிரியர் கருணா னந்தன், பேராசிரியர் தேன்மொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக நடத்த இருக்கிறார்கள்.

பண்பாட்டுப் படையெடுப்பு என்பது அரசியல் படையெடுப்பைவிட ஆபத்தானது. மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்காகத்தான் ஆய்வறி ஞர்களுக்கு நாம் சிறப்பு செய்கிறோம். திராவிடம் என்றால், ஏதோ ஒரு இடத்தையோ, இனத்தையோ குறிப்பது அல்ல. அது பண்பாட்டைக் குறிப்பது என்பதை சிறப்பாக நிலைநாட்டுவதற்கு மிகப்பெரிய சான்றாவணமாகத்தான் சிலையாக நிற்கிறார். அது சிலையல்ல, நமக்கு வழிகாட்டியாக இருக்கிற ஒரு சீலம் என்று கூறுகிறோம்.

– இவ்வாறு ‘கலைஞர்’ தொலைக் காட்சிக்குப் பேட்டியளித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

சிந்துவெளி ஆய்வாளர் முனைவர் ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர் கருணானந்தன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், சேதுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *