விநாயகர் ஊர்வலம் 12 நாட்கள் மும்பை திணறல்! சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறி!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மும்பை, செப்.29- மும்பை, அய்தராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் 12 நாள்கள் வரை நீடித்துள்ளதால், நகரின் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்தை சீராகப் பராமரிப்பதில் நகர நிர்வாகமும், காவல்துறையும் பெரும் பதற்றத்துடனும் சவாலுடனும் பணியாற்றி வருகின்றன.

கடந்த 1990-ஆம் ஆண்டு வரை மும்பை, புனே போன்ற நகரங்களில் சிறிய விநாயகர் சிலைகள் 5 நாள்களும், பெரிய விநாயகர் சிலைகள் 8 நாள்களும் வீடுகள் மற்றும் பொது மண்டபங்களில் வைத்து வழிபடப்பட்டு வந்தன. எட்டாம் நாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் பெரிய சிலைகள், இரண்டு நாள்கள் பயணத்திற்குப் பிறகு கடலில் கரைக்கச் செய்யப்படும். அந்த பெரிய சிலைகள் கடலில் கரையும் பத்தாம் நாளில் தான், சிறிய சிலைகளும் கரைக்கப்பட்டு வந்தன. இதனால் ஒட்டுமொத்த விழாவும் 10 நாள்களில் முடிவடைந்தது.

கடந்த 2004-ஆம் ஆண்டில், மும்பையின் புகழ்பெற்ற ‘லால்பாக் ராஜா’ மற்றும் தென் மும்பையின் முக்கிய பெரிய விநாயகர் சிலைகளை 10 நாள்கள் மண்டபங்களில் வைத்து வழிபட மாநகராட்சி அனுமதி அளித்தது. இதனால், 10ஆம் நாள் மண்டபத்தில் இருந்து புறப்படும் பெரிய சிலைகள், ஊர்வலமாக கடலுக்குச் சென்று சேர மேலும் 2 நாள்கள் ஆகின்றன. அந்தப் பெரிய சிலைகள் கரைக்கப்படும் 12ஆம் நாளில் பிற சிறிய சிலைகளும் கொண்டு வரப்படுவதால், தற்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் மொத்தம் 12 நாள்களாக நீடித்துள்ளன.

சிலைகள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நாளும் நகரில் எவ்வித அசம்பாவிதமும் அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடக் கூடாது என்பதில் காவல்துறையினரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் கடும் பதற்றத்துடன் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வரும் காலங்களில் பெரிய விநாயகர் சிலைகளை 15 நாள்கள் வரை வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிலை வைக்கும் நாள்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்வது, நகரின் பாதுகாப்பு மற்றும் அன்றாடப் போக்குவரத்தை மேலாண்மை செய்வதில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *