தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்! முன்னாள் ஒன்றிய அமைச்சர் ‎ப.சிதம்பரம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

காரைக்குடி, செப். 29- “‎வாக்குத் திருட்டு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்” என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ‎ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.
‎சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 5 விளக்கு பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மிகப்பெரிய சதி. அது ஜனநாயக விரோதமான செயல்.
13.30 கோடி பேரை வாக்களிக்க விடாமல் செய்து வாக்குத் திருட்டு தானே? வாக்குத் திருட்டை கண்டித்து ராகுல் காந்தி போராடுகிறார்.
இதில் ராகுல் காந்தி கரத்தைப் பலப்படுத்துவோம். ‎‎வாக்குத் திருட்டு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நிறுத்த வேண்டும். நீக்கப்பட்ட 13.30 கோடி பேரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.” என்று ப.சிதம்பரம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *