வீதிகள் குடியிருப்புப் பகுதிகளில் ஜாதிப் பெயர்களை நீக்கி மறுபெயர்களை சூட்ட வேண்டும்! மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 29- தெருக்கள், குடியிருப்பு;g பகுதிகளில் ஜாதிப் பெயர்களை நீக்கி மறு பெயரிட்டு அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாநில ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 அரசாணை

தமிழ்நாட்டில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் ஜாதிப் பெயர்கள் இருக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு 2025ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

சாலைகள், தெருக்கள் பெயர்களை மாற்றும் முறையில் பல பிரச்சினைகள் உள்ளதால் இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை சேர்ந்த பரமசிவம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசாணைக்கு தடை விதித்தது. மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்தத் தடையை நீக்கி, தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஆட்சியர்களுக்கு உத்தரவு

இந்த விவகாரத்தை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) இமயம் விசாரித்தார். முடிவில் சாலைகள், நீர்நிலைகள், கிராம பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கி மறுபெயரிட்டு அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *