சென்னை, செப். 28- முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா வெளி யிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண் டில் தமிழ்நாடு 5.95 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
இதை தனது சாதனை என தவெக உரிமை கோருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக அரசின் தொடர் உழைப்பால் உருவான கட்டமைப்பு வேகமே தமிழ்நாட்டின் இந்த சாதனைக்குக் காரணம் என வணிக நாளிதழ்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே, அவசரப்பட்டு வெற்றி உலா வருவதற்குப் பதிலாக, 5.95 பில்லியன் டாலர் முதலீட்டின் நிறுவனம் சார்ந்த விவரங்களையும், அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தான தேதி களையும் வெளியிட்டால் பெருமை யாருக்கு சேர வேண்டும் என்பது தெளிவாகும்.
அந்நிய நேரடி முதலீடு என்பது பல கட்டங்களாக நடைபெறும் ஒரு தொடர் நடவடிக்கை. எங்களது உழைப்புக்கான மதிப்பீட்டை வேறு யாரோ உரிமை கோர முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அன்னிய முதலீட்டுக்குத் த.வெ.க. அரசு உரிமை கோர முடியாது முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்
Leave a Comment
