‘‘எல்லாருக்கும் எல்லாம்’’, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ – இது திராவிடப் பண்பாடு!
‘‘பிறவியிலேயே நாங்கள் உயர்ந்தவர்கள்; பிறவியிலே நாங்கள்தான் எல்லாம்; மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள்’’ – இது ஆரியப் பண்பாடு!
‘‘பிறவியிலேயே நாங்கள் உயர்ந்தவர்கள்; பிறவியிலே நாங்கள்தான் எல்லாம்; மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள்’’ – இது ஆரியப் பண்பாடு!
- ‘‘எல்லாருக்கும் எல்லாம்’’, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ – இது திராவிடப் பண்பாடு! ‘‘பிறவியிலேயே நாங்கள் உயர்ந்தவர்கள்; பிறவியிலே நாங்கள்தான் எல்லாம்; மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள்’’ – இது ஆரியப் பண்பாடு!
- திராவிட நாகரிகம் – சிந்துவெளி அகழாய்வு 102 ஆம் ஆண்டு விழா – ‘‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்!’’
- இது ஒரு சிறிய தொடக்கம்தான்; இது முடிவல்ல!
- வரலாற்றுப் பேராசிரியர்கள் பேசுவது தான் மிக முக்கியம்!
- இரண்டு புத்தகங்கள் சலுகை விலையில்!
- மூன்று நாளேடுகள், மூன்று மொழிகளிலே தொடங்கப்பெற்றன!
- சுயமரியாதை இயக்கத்தை, நீதிக்கட்சியோடு இணைத்துதான், திராவிடர் கழகமாக இன்றைக்கு மாறி இருக்கிறது!
- ஆரியர் – திராவிடர்!
- ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’, ‘‘எல்லாருக்கும் எல்லாம்’’, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ – இது நம்முடைய பண்பாடு!
- ‘‘பிறவியிலேயே நாங்கள் உயர்ந்தவர்கள்; பிறவியிலே நாங்கள்தான் எல்லாம்; மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள்’’ – இது ஆரியப் பண்பாடு!
- ‘‘The Dravidian Elements in Indian Culture’’
சென்னை, செப்.27 இன்றைக்கு ஏன் வேத காலத்தை முன்னால் நிறுத்தி, திராவிடப் பண்பாட்டை பின்னாலே ஏன் தள்ளுகிறார்கள்? ‘‘எல்லாருக்கும் எல்லாம்’’, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’, – இது திராவிடப் பண்பாடு! ‘‘பிறவியிலேயே நாங்கள் உயர்ந்தவர்கள்; பிறவியிலே நாங்கள்தான் எல்லாம்; மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள்’’ இது ஆரியப் பண்பாடு! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிட நாகரிகம் – சிந்துவெளி அகழாய்வு 102 ஆம் ஆண்டு விழா – ‘‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்!’’
கடந்த 22.9.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், திராவிட நாகரிகம் – சிந்துவெளி அகழாய்வு 102 ஆம் ஆண்டு விழா – ‘‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
இது ஒரு சிறிய தொடக்கம்தான்; இது முடிவல்ல!
மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்பட வேண்டிய சிறப்பான ஒரு சிந்துவெளி நாகரிகம் என்ற திராவிட நாகரிகத்தினுடைய 102 ஆம் ஆண்டு விழா என்ற பெருமைக்குரிய இந்த நிகழ்ச்சியை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre) மிக சிறப்பான வகையிலே இன்றைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது ஒரு சிறிய தொடக்கம்தான்; இது முடிவல்ல. தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க பல இடங்களிலே இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கவிருக்கின்றன. அப்படிப்பட்ட இந்த சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற இந்த கருத்தரங்கத்திற்கு மிக முக்கியமாக சிறப்புரைகள் வழங்க வந்திருக்கக்கூடிய பெருமைக்கும், பாராட்டுதலுக்கும் உரிய மேனாள் அய்ஏஎஸ் அதிகாரி – பணிநிறைவு பெற்றவர்களில் இன்றைய சிறப்பான தமிழின உணர்வாளர் – நல்ல ஆய்வாளர் – எத்தனையோ பேர் பதவிகள் மேலும் வராதா என்று நினைக்கின்ற நேரத்தில், எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், கொள்கைக்காக அவர் பதவியைப் பற்றிக் கவலைப்படாமல், முழுக்க முழுக்க ஒரு அய்ஏஎஸ் அதிகாரியாக செல்வாக்குள்ள ஓர் அதிகாரியாக இன்றைக்கும் இருக்கிறார். அப்பேர்ப்பட்ட ஒருவர் சிறப்பான இந்த பணியிலே ஈடுபட்டு, மற்றவர்கள் சொல்ல இயலாத ஆய்வுகளை எல்லாம் இன்றைக்குச் சொல்லிக் கொண்டிருக்கிற எங்கள் பெருமைக்குரிய சிந்துவெளி ஆய்வாளர் முனைவர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்யா அவர்களே,
இந்த நிகழ்ச்சியிலே அவரைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்ற இருக்கக்கூடிய திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் பேராசிரியர் கருத்துரையாளர் அருமைத் தோழர் கருணானந்தன் அவர்களே,
அதேபோல வரவேற்புரையாற்றிய திராவிடர் வர லாற்று மய்யத்தினுடைய செயலாளர் முனைவர் மாரப்பன் அவர்களே,
இந்த நிகழ்ச்சிக்கு நன்றி உரை கூறி இருக்கக்கூடிய முனைவர் தேன்மொழி அவர்களே மற்றும் இந்த அரங்கத்திலே வந்திருக்கக்கூடிய கழகத் துணைத்தலை வர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கும், திராவிடர் கழகத்திற்கும் மிக நெருக்கமான ஒரு தொடர்பாளராக இருக்கக்கூடிய கழகப் பொருளாளர் அருமை நண்பர் குமரேசன் அவர்களே, இந்த நிகழ்ச்சி யிலே கலந்து கொள்கின்ற பெருமக்களே, மாணவச் செல்வங்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
வரலாற்றுப் பேராசிரியர்கள்
பேசுவது தான் மிக முக்கியம்!
பேசுவது தான் மிக முக்கியம்!
பொதுவாக நான் இறுதியிலே பேசுவேன் என்ற ஒருமுறை இருந்தாலும் கூட, இன்றைக்குத் தொடர்ந்தும், இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் என்ற காரணத்தால், தொண்டை வலி அதிகமாக ஆகி, மருத்துவர்கள் காலையிலே கூட, ‘‘நீங்கள் கொஞ்ச நாளைக்கு தொண்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்; தொண்டை வலி இருக்கிறது, அது தீர வேண்டுமானால், ஓய்வு தேவை’’ என்று மிகப்பெரிய அளவிற்கு வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆகவே, இந்த நிகழ்ச்சிக்குக் கூட எனக்கு அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. அதை மீறித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அதிக நேரம் உட்கார முடியாது என்ற சூழ்நிலை இருக்கிறது; அதிக நேரம் பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால், அறிஞர்கள் பேசுவதுதான், பேராசிரியர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள் பேசுவது தான் மிக முக்கியமானதாகும். அந்த வகையிலே, அவர்களுடைய உரைகளை எல்லாம், நான் வெளியிலே இருந்து கூட காணொலி மூலமாக கேட்டுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது
இரண்டு புத்தகங்கள் சலுகை விலையில்!
ஆகவே, முதற்கண் நான் ஒரு சில வார்த்தைகளைக் கூறி என்னுடைய உரையை நிறைவு செய்வேன். வழக்கம் போல, இரண்டு புத்தகங்களை இங்கே வெளியிட இருக்கிறேன். ‘சர்ஜான் மார்ஷலை ஏன் கொண்டாட வேண்டும்?’ என்ற புத்தகமும், ஏற்கெனவே நாம் வெளியிட்டிருக்கிற இன்னொரு புத்தகமும் 200 ரூபாய்க்குக் கொடுக்கப்படும். விலைக்காக அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்; அற்புதமான ஆய்வுகள், அவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அந்த வகையிலேதான் ‘‘சர் ஜான் மார்ஷலை ஏன் கொண்டாட வேண்டும்?’’ என்று அய்யா பால கிருஷ்ணனார் அவர்கள் எழுதிய அந்த புத்தகமும், அதேபோல மற்றொரு புத்தகமும் இருக்கிறது. நான் பேசி முடித்த உடனே, இங்கே வெளியிடுவார்கள். தோழர்கள் அதை வாங்கிப் பயன்பெற வேண்டும். அதிலேயே எல்லா கருத்துகளும் சிறப்பாக இருக்கும் என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம், வாழ்த்துகள்!
சிந்துவெளி நாகரிகம், அந்தப் பண்பாட்டின் அடிப்படை திராவிடத் தளம் என்பது இருக்கிறதே, அது மிகச் சிறப்பானதாகும். இது ஒரு சின்ன தொடக்கம் என்று நான் சொன்னேன். என்ன அதற்கு அடையாளம் என்று சொன்னால், பெரிய அளவிற்கு அதுவே நூற்றாண்டு அளவிற்குச் சிறந்து வளர்ந்துள்ளது.
மூன்று நாளேடுகள், மூன்று மொழிகளிலே தொடங்கப்பெற்றன!
திராவிடர் இயக்கம் 1916 ஆம் ஆண்டிலே தொடங்கப்பட்டது, பார்ப்பனரல்லாதார் இயக்கம் – நீதிக்கட்சி என்ற பெயராலே. ஆனால், அந்த இயக்கத்தினால் மூன்று நாளேடுகள், மூன்று மொழிகளிலே தொடங்கப்பெற்ற வரலாறு உங்களுக்குத் தெரியும்.
ஒன்று, ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகை ஆங்கில மொழியில். இன்னொன்று, ஆந்திரா பத்திரிகை. மூன்றாவதாக நம்முடைய தமிழ்நாட்டுக்கு என்று தொடங்கப்பட்ட ஏட்டுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள் ஆய்வு செய்த நேரத்திலே, அவர் தேர்ந்தெடுத்த பெயர் ‘திராவிடன்’ என்று அந்த நாளிதழுக்குப் பெயர் வைத்தார்கள்.
சுயமரியாதை இயக்கத்தை, நீதிக்கட்சியோடு இணைத்துதான், திராவிடர் கழகமாக இன்றைக்கு மாறி இருக்கிறது!
எனவே, அப்படி திராவிட இயக்கம், திராவிடம், திராவிடன் என்ற பண்பாட்டுத் தளத்தை வேகமாக முன்னே கொண்டு செல்லக்கூடிய ஒரு கட்டம். அதேபோல நண்பர்களே, அடுத்த கட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள், அப்போது அந்த நீதிக்கட்சியை அவர்கள் எதிர்த்தாலும் கூட, பிறகு அதே நீதிக்கட்சியால்தான் விடியல் வரும் என்பதை உணர்ந்து, பிறகு அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை, நீதிக்கட்சியோடு இணைத்துதான், திராவிடர் கழகமாக இன்றைக்கு மாறி இருக்கிறது.
அப்போது தந்தை பெரியார் அவர்கள் ஒரு கருத்தை, நீதிக்கட்சியினருக்குச் சொன்னார்கள். ‘‘நீங்கள் ஏன் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று எதிர்மறை பெயரை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? பார்ப்பனர்கள் 100–க்கு மூன்று பேர். அல்லாதார் 97 பேர். 97 பேர்களுக்கும் ஓர் அடையாளம் வேண்டுமே தவிர, இந்த மூன்று பேர் அல்லாதவர்கள் என்று சொல்வது இருக்கிறதே, அது பகுத்தறிவுக்கும் ஏற்புடையதல்ல; நியாயத்துக்கும் கட்டுப்பட்டது இல்லை’’ என்று அவர்கள் சொல்லிவிட்டு, நமக்கு அருமையான பண்பாட்டு அடிப்படையிலே, வெறும் இன அடிப்படையில் அல்ல – கவனிக்க வேண்டும், பண்பாட்டு அடிப்படையிலே, திராவிடம் என்று சொல்லக்கூடிய அளவில், ‘‘இதை திராவிடர் இயக்கம் என்று, திராவிடம் என்று அழையுங்கள்! திராவிடர் இயக்கம்’’ என்று அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுயமரியாதை இயக்கத்திற்கு நிறுவனத் தலைவர் – நீதிக்கட்சிக்குப் பனகால் அரசர், சர். பிட்டி தியாகராயர் எல்லாம் வெளியேறிய உடனே, தேர்தலில் தோல்வி வந்த உடனே, அந்தக் கட்சியே இனிமேல் இருக்காது என்று சொன்ன காலத்திலேதான், 1940 இல் தந்தை பெரியாரைத் தலைவராக அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். 1938 ஆம் ஆண்டிலேயே அய்யா சிறைச்சாலையில் இருக்கும்போது அவரிடம் வந்து உரையாடினார்கள். அந்த இயக்கத்திற்கு, திராவிடர் என்ற அந்தப் பண்பாட்டு அடிப்படையில் பெயர் வைத்ததுதான் திராவிடர் இயக்கம் என்று ஆகி, அவை இரண்டும் இணைந்த போது, திராவிடர் கழகம் என்று ஆயிற்று.
எனவே, திராவிடர் என்று சொல்லும்போது, ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். சில பேர் சொன்னார்கள், ஏனென்றால், திராவிட நாகரிகத்தைப் பற்றி, சிந்துவெளி நாகரிகம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் இங்கே பேராசிரியர்கள், அறிஞர்கள் சொல்ல இருக்கிறார்கள். ஆகவே அந்த விஷயத்துக்குள்ளே போக வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொல்ல வாய்ப்பில்லாத ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று, சில மணித்துளிகளிலே உங்களுக்கெல்லாம் சிலவற்றை நினைவூட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆரியர் – திராவிடர்!
ஆரியர்– திராவிடர் என்று இப்பொழுது என்ன இருக்கிறது? அவர்கள் எல்லாம் கலந்துவிட்டார்களே என்று சொல்லும்போது, தந்தை பெரியார் அவர்கள் ஒரு பதிலைச் சொன்னார். அண்ணாவும் அதை விரிவாக வழிமொழிந்து விளக்கம் கொடுத்தார்கள். என்ன அந்தப் பதில் என்று சொன்னால் நண்பர்களே, கவனியுங்கள்! இளைய தலைமுறை அல்லது புதிதாக வரக்கூடியவர்கள் இந்தக் கருத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அற்புதமாகச் சொன்னார்கள்.
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’, ‘‘எல்லாருக்கும் எல்லாம்’’, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’
– இது நம்முடைய பண்பாடு!
– இது நம்முடைய பண்பாடு!
பெரியார் சொன்னார், ‘‘இரத்த பரிசோதனையை செய்து இவர் திராவிடர்; இவர் ஆரியர் என்று நாங்கள் சொல்லவில்லை. இனப்பாகுபாடுதான் என்று சொல்லவில்லை. பண்பாட்டு அடிப்படையில் நீங்கள் திராவிடர்கள் என்பதுதான் மிக முக்கியம். ஆரியப் பண்பாடு வேறு; திராவிடப் பண்பாடு வேறு. இன்றைக்கு ஏன், வேத காலத்தை முன்னால் நிறுத்தி, திராவிடப் பண்பாட்டை பின்னாலே ஏன் தள்ளுகிறார்கள்? இரண்டிற்கும் அடிப்படைத் தத்துவங்கள் நேர் எதிரானவை. அந்த அடிப்படைக்கு ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமானால், திராவிடப் பண்பாடு என்பது, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’, ‘‘எல்லாருக்கும் எல்லாம்’’, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ – இது நம்முடைய பண்பாடு! அதற்கு நேர் எதிரானது ஆரியப் பண்பாடு என்பது.
‘‘பிறவியிலேயே நாங்கள் உயர்ந்தவர்கள்; பிறவியிலே நாங்கள்தான் எல்லாம்; மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள்’’
– இது ஆரியப் பண்பாடு!
– இது ஆரியப் பண்பாடு!
‘‘பிறவியிலேயே நாங்கள் உயர்ந்தவர்கள்; பிறவி யிலே நாங்கள்தான் எல்லாம்; மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள்’’ என்று சொல்லக்கூடிய அளவு மட்டுமல்ல மொழியைக் கூடப் பிரித்தார்கள்; மொழிக்குக் கூட மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை. இன்றைக்கு சர்ஜான் மார்ஷலை நாம் கொண்டாடுகிறோம். அதுமட்டுமல்ல, அருமை அய்யா பாலகிருஷ்ணன் அவர்களும், சுந்தர் கணேசன் அவர்களும் எழுதிய புத்தகம் இங்கே வெளியிடப்பட்டு, சலுகை விலையில் கொடுக்கப்படவிருக்கிறது.
‘‘The Dravidian Elements in
Indian Culture’’
Indian Culture’’
அதில் ஒரு செய்தியைப் பார்த்தீர்கள் என்றால், ஒரு நீண்ட பட்டியல் – வெளிநாட்டவர்களாக வந்த வர்கள், இந்த சிந்துவெளி நாகரிகத்துக்காக, திராவிடர் நாகரிகத்துக்காக அவர்களுடைய பங்களிப்பு இருக்கிறதே, இந்த நாட்டுக்காரர்களுக்கே இல்லாத பங்களிப்பு – ‘‘அவர் இன்னொரு நாட்டுக்காரர்; ஆகா, வெளிநாட்டுக்காரர் – வெள்ளையர் வந்துதான் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள். வெள்ளையர் வந்துதான் குட்டிச்சுவர் ஆகிவிட்டது’’ என்றெல்லாம், புதிய தேசியங்கள் பேசுகின்றனவே, அவர்களுக்குச் சொல்லுகின்றோம், இதில், ஒரு பெரிய பட்டியலே வந்திருக்கிறது. எப்படி எல்லாம் நாகரிகம் இருந்தது? அந்த நாகரிகத்துக்கு அவர் செய்த பணி என்ன? என்று சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதே மாதிரி சென்சஸ் என்று வரக்கூடிய அளவில், சென்சஸ் அதிகாரிகள் எல்லாம் கூட இந்தப் பண்பாட்டுக்கு ஒத்துழைப்பார்கள். அதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமானால், Gilbert Slater – ‘‘The Dravidian Elements in Indian Culture’’ அருமையான புத்தகம். இப்படி நிறைய சொல்லலாம். அவரோடு நமக்கு நேரடியாகத் தொடர்பு இல்லை. சென்னையில், பேராசிரியராகப் பணியில் இருந்தார்.
(தொடரும்)
