அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் பெரியார் நடை ஓட்டம் நேற்று (26.9.2026) நடந்தது. நடை ஓட்டம் முடிந்ததும் சிற்றுண்டியுடன் கலந்துரையாடல் நடந்தது. ஒவ்வொருவரும் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டு உணர்ச்சிப் பெருக்காக உரையாற்றினர். பலர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் வீரமணி ஆகியோர் தங்கள் இல்லத்திற்கு வந்துள்ளார்கள் என்றும், தங்களது தாத்தா, பெற்றோரின் இயக்க ஈடுபாடுகளையும் நன்றியுடன் கூறினார்கள். வந்திருந்த சிறுவரும், சிறுமியர் பெருமையுற்றனர். இந்த நன்றிக் குடும்பங்கள் பெரியாரின் சொத்துகள் என பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் தெரிவித்தார்.
அமெரிக்கா: வட கரோலினாவில் பெரியார் நடை ஓட்டம்
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
