மதுரையில் தந்தை பெரியாருக்கு எழுச்சிமிகு விழா!

6 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மதுரை, செப்.27- நாமெல்லாம் கொண்டாடும் விழா தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. நன்றிப்பெருக்கு விழா. மதுரையில் செப்…17இல் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாள் விழா எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும்  கொண்டாடப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைப்படி செப்-16 புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை மாநகரத்தில் இருக்கும் தோழர்களுக்கும், சிறப்பான செயல்பாட்டை, உழைப்பை, வழங்கி கழகப் பரப்புரைக்கும் ஊக்கம் கொடுக்கும் பொறுப்பாளர் களுக்கும், தொடர்ந்து நன்கொடைகள் வழங்கி உற்சாகப்படுத்தும் கழக, ஆர்வலர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெயர் பொறித்த வாழ்த்து அட்டைகளுடன் கூடிய இனிப்பு, கார வகைகளை (இயற்கை சூழலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அமர்ந்திருக்கும் வாழ்த்து அட்டையுடன்) ஒவ்வொரு தோழர்களின் இல்லங்களுக்கும் மாவட்டச் செயலாளர் இராலீ.சுரேஷ் நேரடியாக வழங்கி பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தபோது அனைத்துத் தோழர்களும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

செப்டம்பர் 17-காலை 9-30க்கு தொடக்க நிகழ்வாக மதுரை கிரைம் பிராஞ்சு தமிழக எண்ணெய் பலகாரம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் எ.செல்வப்பெரியார் ஏற்பாட்டில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வத்தின் வாழ்த்து முழக்கங்களோடு தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட துணைத் தலைவர் நா.முருகேசன் பொ.பவுன்ராஜ் ஆகியோர் மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மேல அனுப்பானடி

இரண்டாவது நிகழ்ச்சியாக காலை 10 மணிக்கு  மேல அனுப்பானடி பகுதியில் மாவட்ட துணைத் தலைவர் பொ.பவுன்ராஜ், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் சுப.முருகானந்தம், பேக்கரி கண்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வேல்துரை ஆகியோரால் அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியார் படத்துக்கு அருகில் வாழ்த்து முழக்கங்கள் இட்டு பொதுமக்களுக்கு மாவட்ட துணைச் செயலாளர் க.சிவா, பொ.தனுஷ்கோடி ஆகியோர் கேக் வழங்கினர். வே.செல்வம் தொடங்கி வைத்துப் பேசிய பின் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் தனது  உரையில் பெரியார் பேருழைப்பால் தமிழர்களின் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார். மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் சுப.முருகானந்தம் பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளை எடுத்துரைத்தார். நிறைவாக மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு, பெரியார் தோன்றியிருக்காவிட்டால் தமிழர்களின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியே எனக்கூறி பல செய்திகளை பட்டியலிட்டார்.

தல்லாகுளம்

தல்லாகுளம் பெரியார் சிலைக்கு மதுரை மாநகரத்தின் அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து வந்து  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகத்தின் சார்பாக மூன்றாம் நிகழ்வாக 10-30 மணிக்கு மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாவட்டச் செயலாளர் இராலீ.சுரேஷ், முனைவர் வா.நேரு, காப்பாளர் சே.முனியசாமி,  விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இராஜேஸ்வரி ராமசாமி மற்றும் மகளிரணித் தோழியர்கள் தோழர்கள் புடைசூழ வாழ்த்து முழக்கங்களை எழுப்ப, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நூற்றுக்கும் அதிகமான தோழர்கள் பங்கேற்ற நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சோ.சுப்பையா, பெத்தானியாபுரம் பாண்டி ஆகியோர்  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னாள் மாவட்டச் செயலாளர் க.அழகரின் மருமகள் தனது மகள் மதிவதினியுடன் வந்து மாலையிட்டார்.

புதூர் பேருந்து நிலையம்

நான்காம்  நிகழ்வாக 10-45 ‌மணிக்கு மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகில் கிளைக் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பாக்கியம் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியார் படத்துக்கு முன் முழக்கங்கள் எழுப்பிய பின் கிளைகளில் தோழர் அழகுப்பாண்டி, நன்னன், பெரி.காளியப்பன், மு.மாரிமுத்து, ஆட்டோ செல்வம் ஆகியோரால் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

மாவட்டத் துணைத் தலைவர் இரா.திருப்பதி தொடக்க உரைக்குப் பின் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.பால்ராஜ், காப்பாளர் சே.முனியசாமி, முனைவர் வா.நேரு, தி.மு.க. சொற்பொழிவாளர்  அலெக்சாண்டர் ஆகியோர் உரையாற்றினர்.

அய்ந்தாம் நிகழ்வாக திராவிட முன்னேற்றக் கழக மின் கழக தொழிற்சங்கத் தோழர்கள் ராஜேஷ் கண்ணா, சீனிக்குமார், மூத்த தொழிற்சங்க தோழர் இ.பி.முத்தையா, புதூர் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பாக அலங்கரிக்கப்பட்ட பெரியார் படத்திற்கு வாழ்த்து முழக்கங்களோடு மாலை அணிவிக்கப்பட்டது. உறுதிமொழி எடுக்கப்பட்டதற்குப் பின் ராஜேஸ் கண்ணா நன்றி தெரிவித்து உரையாற்றி
மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.

சொக்கிகுளம்

ஆறாம் நிகழ்வாக  மதுரை சொக்கிகுளம் ரவுண்டானா அருகில் கழகத் தோழர்கள் பெரியார் பிறந்த நாள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பி கார், பேருந்து, ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைத்து மக்களுக்கும் தோழர்கள் முரளி, பெ.தனசேகரன் ஆகியோர் இனிப்புகள் வழங்கி பெரியார் பிறந்த நாள் என்பதைச் சொன்னபோது மகிழ்வுடன் இனிப்புகளை பெற்றுக்கொண்டனர்.

ஏழாம் நிகழ்வாக நேதாஜி ரோடு பீபீ குளத்தில் மாவட்டச் செயலாளர் இராலீ.சுரேஷ் தலைமையில் சே.முனியசாமி கழகக் கொடியினை ஏற்றிவைத்தார். அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது. தோழர்கள் ஓட்டுநர் தியாகராஜன், மணி ராஜ், பா.சடகோபன் ஆகியோர் இனிப்புகள் வழங்கினர். வே.செல்வம், சே.முனியசாமி ஆகியோருக்கு பின் முனைவர் வா.நேரு உரையாற்றினார்.

மீனாட்சிபுரத்தில்…

எட்டாம் நிகழ்வாக மதுரை மீனாட்சிபுரத்தில் கிளைக் கழகத் தலைவர் பெ.தனசேகர் தலைமையில் வைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு முன் தோழர்கள் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் காசி, நல்லதம்பி ஆகியோர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மாவட்டத் துணைத் தலைவர் இரா.திருப்பதி உரையாற்றினார். முனைவர் வா.நேரு நிறைவுரையாற்றினார்.

ஒன்பதாம் நிகழ்வாக செல்லூர் 50  அடிரோட்டில் இரா.திருப்பதியின் தொடக்கவுரையோடு கழகக் கொடியினை மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் ஏற்றிவைத்தார். செல்லூர் எபி, ஒப்பந்ததாரர் சண்முகம் ஆகியோர் இனிப்பு வழங்கினர். முனைவர் வா.நேரு நிறைவுரையாற்றினார்.

செல்லூர் சிவன் தெருவில்…

பத்தாம் நிகழ்வாக செல்லூர் சிவன் தெருவில்‌ சேகர் ஏற்பாட்டில் வைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு முன் கழகக் கொடியினை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் எ.செல்வப்பெரியார் வாழ்த்து முழக்கங்கள் உடன் ஏற்றிவைத்தார். மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் சிறப்பாக உரையாற்றினார்.

பதினோரோம் நிகழ்வாக தத்தனேரி அருள்தாஸ்புரம் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். முனைவர் வா.நேரு நிறைவுரையாற்றினார்.

இஸ்மாயில்புரம்

பன்னிரெண்டாம் நிகழ்ச்சியாக முனிச்சாலை இஸ்மாயில்புரம் 8ஆம் தெரு முன்பாக முன்னாள் மாவட்டச் செயலாளர் க.அழகர் ஏற்பாட்டில் கழகக் கொடியினை சே.முனியசாமி ஏற்றிவைத்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது, இராதிருப்பதி, முனியசாமி ஆகியோருக்கு பின் முனைவர் வா.நேரு பெரியாரின் சிந்தனைகளை எடுத்துக்கூறினார்.

பதிமூன்றாம் நிகழ்வாக சோலையழகுபுரம் ஒன்றாவது தெருவில் காப்பாளர் சே.முனியசாமி ஏற்பாட்டில் கழகக் கொடியேற்றி வைக்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முனைவர் வா.நேரு தந்தை பெரியார் பற்றி எடுத்துக்கூறினார்.

செப்-17 காலை 8-30 மணிக்கு தொடங்கிய பெரியார் பிறந்த நாள் நன்றிப் பெருக்கு விழாவாக மதுரை மீனாட்சி குடமுழுக்கு நெருக்கடி இருந்தாலும் எந்த இடத்திலும் எவ்விதக் காவல்துறை தடைகளுமின்றி வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான பகுதிகளில் பிற்பகல் 3-30 வரை கொண்டாட்டம் நீண்டு நிறைவுற்றது. இப்பயணத்தில். தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் ஒருங்கிணைப்பில் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், காப்பாளர் சே.முனியசாமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு, மாவட்டச் செயலாளர் இராலீ.சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் இரா.திருப்பதி, நா.முருகேசன், பொ.பவுன்ராஜ். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.பால்ராஜ்,  மாவட்ட துணைச் செயலாளர்கள் க.சிவா, பொ.தனுஷ்கோடி மற்றும் இனிப்புகள், வாகனங்கள் வழங்கி துணை நின்ற மாவட்ட இளைஞர் அணித் தலைவர் எ.செல்வப்பெரியார். செயலாளர் பா.காசி, பகுதிக் கழகத் தோழர்கள் பேக்கரி கண்ணன், சீ.தேவராஜபாண்டியன், பா.சடகோபன், மணிராஜ் மு.மாரிமுத்து, பெத்தானியாபுரம் பாண்டி, முரளி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அல்லிராணி, நன்னன், ஒப்பந்ததாரர் சண்முகம்,                    ஆட்டோ செல்வம், பெரி.காளியப்பன், செல்லூர் சேகர், எபி, நல்லதம்பி மற்றும் ஏராளமான தோழர்கள் பயணத்தில் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *