தூத்துக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தூத்துக்குடி, செப். 24- தூத்துக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியும், ஓவியப் போட்டியும் 18.9.2026 அன்று காலை 9 மணிக்கு தூத்துக்குடி சி.எம்.மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முதலில் மாணவர் பதிவு நடைபெற்றது. அதன் பின் தேநீரும், பிஸ்கட்டும் அனைவருக்கும் வழங் கப்பட்டன. அடுத்து, பேச்சுப் போட்டித் தனியாகவும், ஓவியப் போட்டித் தனியாகவும் அதற்கென ஒதுக்கப்பட்ட அறைகளில் நடை பெற்றன. போட்டிகள் நண்பகல் ஒரு மணியளவில் நிறைவு பெற் றது. அனைவருக்கும் உணவு வழங்கப் பட்டது.

மாணவர்கள் தங்கள் உரையின் தலைப்பைக் கூறிப் பேசிய பேச்சானது மிகச் சிறப்பான தயாரிப்புடன் ஆர்வத்துடன் வந்துள்ளார்கள் என்பதைக் காட்டியது. கண்காணிப்பாளர்களாக மோ.அன்பழகனும், கி.கோபால் சாமியும் பணியாற்றினர். நடுவர் களாக இருந்து மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.வெங்கட்ராமன், மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ், கவிஞர் கோ.இளமுருகு ஆகியோர் நடுநிலையோடு செயல்பட்டு மதிப்பெண் அளித்துப் போட்டி யாளர்களின், உடன் வந்த ஆசிரியர்களின் பாராட்டுதலைப் பெற்றார்கள். போட்டி இனிதே நடைபெற மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மு.முனியசாமி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், பெரியார் மய்யக் காப்பாளர் பொ.போஸ் ஆகியோர் தேவையான உதவிகளைச் செய்து தந்தனர். போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்றிட மாவட்டக் கழகக் காப்பாளர் மா.பால் ராசேந்திரம் ஒருங்கிணைப்பாளராகச் செயல் பட்டு அனைவரின் பாராட்டுதலை யும் பெற்றார்.

பேச்சுப் போட்டியில், வகுப்பு 6-9 முடிய முதல் பரிசு – புனித லசாவ் மேனிலைப் பள்ளி 6ஆம் வகுப்பு மாணவர் அபிஷேக் பெற்றார். இரண்டாம் பரிசு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேனிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி வி.சிந்துஜா பெற்றார். மூன்றாம் பரிசு புனித மரியன்னை ஆண்கள் மேனிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர் ஆர்.அசுவதவேல் பெற்றார். ஆறுதல் பரிசினை சி.எம்.மேனிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர் கூ.கூடலிங்கம் பெற்றார். கிரசென்ட் மெட்ரிக் மேனிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவன் எ.செய்யது பயாஸ் பெற்றார்.

வகுப்பு 10-12 முடிய முதல் பரிசினை புனித பிரான்சிஸ் சேவியர் ஆண்கள் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவன் தி.ராபின்சன் பெற்றான். இரண்டாம் பரிசினை கால்டுவெல் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவன்  எஸ்.ஜெ.அனிஸ் பெற்றார். மூன்றாம் பரிசு தங்கம்மாள் நினைவு மேனிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவி த.மானிஷா பெற்றார். ஆறுதல் பரிசினைக் கால்டுவெல் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவன் எம்.சுஜித் பெற்றார்.

ஓவியப் போட்டி, வகுப்பு 6-9 முடிய முதல் பரிசு புனித லசாவ் மேனிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவன் ஜெனிஸ் பெற்றார். இரண்டாம் பரிசினை சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேனிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி அ.மரியஜெனிவா பெற்றார். மூன்றாம் பரிசு புனித லசாவ் மேனிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவன் சிவமாணிக்கத்துக் கிடைத்தது. ஆறுதல் பரிசினை புனித பிரான்சிஸ் சேவியர் மேனிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவன் சி.மனோஜ் தட்டிச் சென்றான்.

வகுப்பு 10-12 முடிய முதல் பரிசு, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேனிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி ப.மகாசெல்வி பெற்றார். இரண்டாம் பரிசினைப் புனித லசாவ் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவன் கிளார்ட்வின் வென்றார். மூன்றாம் பரிசு, தங்கம்மாள் நினைவு மேனிலைப் பள்ளி, 10ஆம் வகுப்பு மாணவன் ரா.தரணிவேல் பெற்றார். ஆறுதல் பரிசு, புனித மரியன்னை ஆண்கள் மேனிலைப் பள்ளி மாணவர் கே.ஆதிமாரி, வகுப்பு 11 பெற்றார்.

கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும்ன சான்றிதழ்களும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசாகக் கழகப் புத்தகங்களையும் 15.9.2026 அன்று பள்ளிகளுக்கு நேரில் சென்று தலைமையாசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. போட்டியில் 120 மாணவர்களும், 10 ஆசிரியர்களும, பெற்றோரும் வருகை தந்து பெருமைப்படுத்தினார்கள்.

ஓவியப் போட்டியில் பரிசு பெற்ற படங்கள் தரப்பட்டுள்ளன. எனினும், பெரும்பாலான மாணவர்கள் ஒதுக்க முடியாத அளவிற்குச் சிறப்பாகவே படங்களை வரைந்திருந்தனர் என்பது மிகச் சிறப்பாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *