பெங்களூரு உமாதேவி மறைவு! கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெங்களூரு, செப். 24- பெங்களூரு லிங்கராஜா புரம் வாழ்விடமாகக் கொண்ட கருநாடக மாநிலம் குடிநீர் வழங்கல் வாரிய மேனாள் செயற் பொறியாளர் ஆ.கமலக்கண்ணனின் வாழ்விணையர் உமாதேவி (வயது 74) உடல் நலக் குறைவால் 17.9.2026 (தந்தை பெரியார் பிறந்த நாள்) மாலை 5 மணி அளவில் முடிவெய்தினார்.

பொறியாளர் ஆ.கமலக்கண்ணன் மிகுந்த கொடையாளர், 2025ஆம் ஆண்டு நண்பர்களுடன் சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்கு சென்று, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வண்ணமிகு பயனாடை அணிவித்து ‘பெரியார் உலக’த்திற்கு ரூபாய் இரண்டு லட்சத்திற்கான காசோலையை வழங்கி இன்புற்றார்.

பின்னர் 28.2.2025இல் பெங்களூரு தேவராஜ் அர்ஸ் மாளிகையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை பலத்த கரவொலிக்கு இடையே வழங்கி மகிழ்ந்தார்.

கழகத் தலைவர் அய்யாவும் பயனாடை அணிவித்து மகிழ்ச்சி நிறை உரையாற்றி சிறப் பித்தார்கள். மேலும் பெரியார் உலகத்திற்கு வெகு விரைவில் ரூபாய் இரண்டு லட்சத்திற்கான காசோலை வழங்குவதாக உறுதியளித்தார்.

அதேபோல் இயக்க நிகழ்வுகளில் பற்றாக்குறை ஏற்படும் சூழலில் நிதி உதவியளித்து தூக்கிப் பிடிக்கும் கொடைப் பண்பாளர் ஆ.கமலக் கண்ணன். அவரது இணையர் உடல் நல மில்லாமல் இரு திங்களாக மருத்துவம் பெற்று வந்த நிலையில் மறைவுற்றார்.

கழக மாநிலச் செயலாளர் இரா.முல்லைக்கோ, கழக காப்பாளர் மு.சானகி ராமன், கழக பொதுக்குழு உறுபபினர் இரா.இராசாராம், இராஜா.கணேசன், திமுகழக பொறுப்புக் குழு உறுப்பினர் ந.இராமசாமி, ஆனந்தராஜ் திமுக, மூத்த சகோதரர் பிரசாத் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கழகத்தின் சார்பில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் தெரிவிக்கப்பட்டது. இணையரின் இறப்புக்கு ஆ.கமலக்கண்ணன், அவரது மகள், மருமகன், குழந்தைக்கு இரங்கலும் ஆறுதலும் தெரிவித்தனர்.

பணிக்காலத்தில் உடன் பணியாற்றிய அலுவலகர்களும், பொறுப்பாளர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *