வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் (17.9.2026) அன்று அமைந்தகரை பகுதியில் இளைஞரணித் தலைவர் ந.கார்த்திக் தலைமையில் கழக கொடியேற்றப்பட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தி.மு.க. சட்டத்துறை பகுதி துணை அமைப்பாளர் திவாகர், மதன், யுகேஷ் ஆகியோர் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கினர். இளைஞரணிச் செயலாளர் பா.பார்த்திபன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், கழகத் தோழர் மோகன், காங்கிரஸ் பொறுப்பாளர் ஜி.எம்.ரஞ்சித்குமார், சிபிஎம் தோழர் ராஜன் தோட்டம் முருகன் மற்றும் வியாபாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
