வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் (17.9.2026) அன்று கழக கொடியேற்றப்பட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் (17.9.2026) அன்று அமைந்தகரை பகுதியில் இளைஞரணித் தலைவர் ந.கார்த்திக் தலைமையில் கழக கொடியேற்றப்பட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தி.மு.க. சட்டத்துறை பகுதி துணை அமைப்பாளர் திவாகர், மதன், யுகேஷ் ஆகியோர் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கினர்.  இளைஞரணிச் செயலாளர் பா.பார்த்திபன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், கழகத் தோழர் மோகன், காங்கிரஸ் பொறுப்பாளர் ஜி.எம்.ரஞ்சித்குமார், சிபிஎம் தோழர் ராஜன் தோட்டம் முருகன் மற்றும் வியாபாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *