சென்னை, செப்.26- அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த கடம்பூா் ராஜு, வெல்லமண்டி நடராஜன், வைகைச்செல்வன் உள்பட 15 பேரை தவெக துணைப் பொதுச் செயலாளா்களாக முதலமைச்சரும், அக் கட்சியின் தலைவருமான ஜோசப் விஜய் நியமித்துள்ளாா். நியமிக்கப்பட்டவா்களில் 11 போ், அதிமுக முன்னாள் அமைச்சா்களாவா்.
விஜய் முன்னிலையில் மதுராந்தகத்தில் த.வெ.க.வில் இணைந்த சில மணிநேரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சி.மகேந்திரன் திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு: முன்னாள் அமைச்சா்கள் வெல்லமண்டி நடராஜன், கடம்பூா் ராஜு, வைகைச்செல்வன், எஸ்.வளா்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.சி.சம்பத், கே.ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம், எம்.ஆனந்தன், கே.டி.பச்சைமால், என்.ஆா்.சிவபதி மற்றும் ஜே.சந்தீப் ஆனந்த், முத்து வெங்கடேஸ்வரன், தொள்ளமூா் கண்ணன், வி.சி.ஆா்.குமரன் உள்பட 15 போ் துணைப் பொதுச் செயலா்களாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு த.வெ.க.வில் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளாம்!
Leave a Comment
