நகர்ப்புறக் கழிவுகளை கிராமங்களில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 26- திடக்கழிவு மேலாண்மை பொறுப்பு ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப் பட்டதால், நகர்ப்புற கழிவுகளை கிராமங்களில் கொட்டப்படும் அபாயம் உள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை ஊராட்சி நிர்வாகங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்து வதற்காக, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் ‘க்ளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட்’ (CTCL) மற்றும் ‘தூய்மை இயக்கம்’ செயல்பட்டு வந்தன. நிர்வாக வசதிக்காக இவற்றின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது.

அரசின் இந்த முடிவுக்கு தற்போது ஊரக வளர்ச்சித் துறைக்குள்ளேயே கடும் அதிருப்திகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் தினமும் உருவாகும் பல்லாயிரம் டன் திடக்கழிவுகளை அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே கையாண்டு வந்தன.

இவற்றை ஒருங்கிணைத்து நவீன முறையில் செயல்படுத்துவதற்காகவே முந்தைய திமுக ஆட்சியில் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் கீழ் ‘க்ளீன் தமிழ்நாடு கம்பெனி’ உருவாக்கப்பட்டது.

ஆனால், தவெக ஆட்சியில் நகர்ப்புற குப்பைகளை கையாளும் பொறுப்பு ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது நகர்ப்புறங்களில் சேரும் குப்பைகளை கையாளும் பொறுப்பை கிராமங் களின் தலையில் கட்டுவதற்கே வழிவகுக்கும்.

இந்தச் சிக்கல்களை தவிர்க்கவே சென்னை, நீலகிரி தவிர மற்ற 36 மாவட்டங்களில் நகரங்களை ஒட்டியுள்ள 673 ஊராட்சிகளில் குடிநீர், சாலை, வடிகால் மற்றும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்காக ‘நகர்ப்புற வளர்ச்சி இயக்குநரகம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கும் பணிகள் நடந்துவந்தன.

ஆனால், அதை நிறுத்திவிட்டு நகர்ப்புற திடக்கழிவுகளை கையாளும் பொறுப்பை எங்களிடம் கொடுத்தது ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே கிராம ஊராட்சி களில் சேரும் குப்பைகளை முறைப்படி தரம் பிரித்து கையாள போதுமான நிதி இல்லை. இதனால் பல்வேறு ஊராட்சிகளில் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலை களில்தான் குப்பைகள் கொட்டப் படுகின்றன.

தற்போது நகர்ப்புற கழிவுகளையும் கிராமங்களை நோக்கி திருப்பினால், அவை குப்பைக் கிடங்குகளாக மாறிவிடும். எனவே, இந்த முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *