காலை உணவின் தரம் சரிபார்ப்பு, பாலியல் குற்றங்களைக் கையாளுதல் தொடர்பான பள்ளிக் கல்வித் துறையின் புதிய அறிவிப்புகள்!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 26- தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது.

வாந்தி, மயக்கம்

இந்நிலையில் திருவள்ளூர், கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் காலை உணவு சாப்பிட்ட 40 மாணவர் களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும் நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது

இந்த விவகாரங்கள் சர்ச்சையான நிலையில் பள்ளிகளில் காலை உணவை ஆசிரியர்கள் முதலில் சாப்பிட்டு தரம் பார்த்த பிறகே மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ. நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

வழிகாட்டுதல்கள்

தமிழ்நாட்டில் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப் பட்டுள்ளன. அதன்படி சமையலறையில் சமையல் செய்யும் பொருட்கள் தவிர பிற பொருட்கள் வைப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

சமையலறை புகை, தூசி, இல்லாமல் தூய்மையாக எப்போதும் பராமரிக்கப் படுவதுடன், சமையல் பாத்தி0ரங்களை பயன்படுத்து வதற்கு முன்பும் பின்பும் நன்கு சுத்தம் செய்யவேண்டும். சமைத்த உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்னர், அந்த உணவு அவர்களின் உடல்நலத்துக்கு உகந்த தரமான உணவுதான் என்பதை ஆசிரியர்கள் சாப்பிட்டு உறுதி செய்த பின்னரே மாணவர் களுக்கு வழங்க வேண்டும்.

சமையல் செய்த பின்னர் பரிமாறுவதற்கு பயன்படுத்தப் படும் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை முழுமையாக மூடி வைத்து, தேவைப்படும் போது மட்டும் திறந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். சமையல் செய்யும் போதும், சமைத்த பின்னர் பரிமாறுவதற்கு பிற பாத்திரங்களில் உணவை மாற்றிய பின்பும், மூடி வைத்த நிலையில் பாதுகாப்புடன் இருப்பதை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். நாள்தோறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சுழற்சி முறையில் இதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் மீதான அத்துமீறல்களை கையாளுதல்

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள்-வெளிப்படுத்துதலை கையாளுதல், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கையாளுபவர்களுக்கான விழிப்புணர்வு ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளது.

மேலும், ஆசிரியர்கள் செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை எவை? என்பது குறித்தும் அதில் விரிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தலைமை ஆசிரியர், முதல்வர், பள்ளி பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுவிடம் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகாரை அளிக்கும் போது குழுவில் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும்.

குற்றச்சாட்டை காவல் துறையினர் மட்டுமே விசாரிக்க வேண்டுமே தவிர பள்ளி நிர்வாகம் விசாரிக்கக் கூடாது. காவல்துறை சீருடை அணிந்து பள்ளி வளாகத்துக்குள் நுழையக்கூடாது. எந்த ஒரு பள்ளியும் பெற்றோர், பாதுகாவலருக்கு முதலில் தெரிவிக்காமல் பள்ளி வளாகத்துக்குள் மாணவரை விசாரிக்க காவல் துறையினரை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *