ஊற்றங்கரை ப.க.தோழர் சித.அருளின் வாழ்விணையர் பானுமதி மறைவிற்கு -கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் இறுதி மரியாதை செலுத்தினார்!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஊற்றங்கரை, செப்.26- கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் கல்லாவி காட்டுப்பட்டி சுயமரியாதைச் சுடரொளி சிதம்பரம் ஆசிரியரின் மருமகளும் ஊற்றங்கரை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக மேனாள் பொறுப் பாளர் சித.அருளின்  வாழ்விணையரும், ஆசிரியருமான வெ.பானுமதி (வயது 58) 19.09.2026 சனிக்கிழமை இரவு 11.00 மணியளவில் இயற்கை எய்தினார்.

அம்மையார் மறைவிற்கு 20.09.2026 அன்று திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் தலைமை கழகம் சார்பில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், கழகக் காப்பாளர் பழ.பிரபு, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி,  பகுத்தறிவு கலைத்துறை மாநிலச் செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட  துணைத் தலைவர் வ.ஆறுமுகம், அரூர் மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மேட்டூர் மாவட்ட கழகப் காப்பாளர்கள் பழனி. புள்ளையண்ணன், சிந்தா மணியூர் சி.சுப்பிரமணியம், கழகச் சொற்பொழிவாளர் த.யாழ்தீலிபன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் தருமபுரி மா.செல்லதுரை, திருப்பத்தூர் கே.சி.எ.சிற்றரசு, மேனாள் மண்டல தலைவர் பழ.வெங்கடாசலம், மேனாள் மாவட்ட கழகத் தலைவர்கள் கிருட்டினகிரி பெ.மதிமணியன், தருமபுரி வீ.சிவாஜி, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் மா.கவிதா, மேனாள் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் வி.ஜி.இளங்கோ, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்கள் தருமபுரி கதிர்.செந்தில், அரூர் கேஸ்.இராசேந்திரன்,

கிருட்டினகிரி ச.கிருட்டினன், திருப்பத்தூர் தமிழ்செல்வன், மாவட்ட ப.க. செயலாளர்கள் கிருட்டினகிரி க.வெங்கடேசன், தருமபுரி இர.கிருட்டினமூர்த்தி, திருப்பத்தூர் திருப்பதி, மாவட்ட ப.க. அமைப்பாளர் இராம.சகாதேவன், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், தொழிலாளரணி மாவட்டத் தலைவர் சி.வெங்கடாசலம், ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், மேனாள் மாவட்ட ப.க. நிர்வாகி இரு.கிருட்டினன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து. இராஜேசன், வெ. அழகுமணி, பழனி ஆசிரியர், ஜானிகிராமன் ஆசிரியர், போச்சம்பள்ளி கா.ஞானசேகரன், சூளகரை வினோத், முனி.வெங்கடேசன், இராமசாமி, கந்திலி கனகராஜ், சோலையார்பேட்டை இராசேந்திரன், அரூர் அரசு, சஞ்சய் உள்பட கிருட்டினகிரி, அரூர், தருமபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய  மாவட்ட கழகத் தோழர்களும் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

மாலை 5.00 மணியாளவில்  ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு எவ்வித மூடச் சடங்குகளும் இன்றி  உடல் மின் மயானத்தில் உடல் எரியூட்டப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *