வில்லியனூர், செப்.26- ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாள் அன்று தங்களின் திருமண நாளைக் கொண்டாடி மகிழும் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த கழகப் பொதுக்குழு உறுப்பினர்
கி.அறிவழகன்- அ.எழிலரிசி ஆகியோரின் 40ஆம் திருமண நாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கழகத் தோழர்கள் இணையர்களுக்கு சால்வை அணிவித்தும், இயக்கப் புத்தகங்களை வழங்கியும் தங்களுடைய மகிழ்ச்சியையும், அன்பையும் தெரிவித்துக் கொண்டனர்.
நிறைவாக விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்.
