கரந்தைக் கலைக்கல்லூரி மாணவர்கள் பெரியார் திடலை பார்வையிட்டனர்!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப்.26- தஞ்சாவூர் தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஜெயராஜ், எழிலரசன், ஜெய்னம்பு பர்வீன், மாணிக்கவதி ஆகியோர், சென்னை பெரியார் திடலுக்கு வந்திருந்து, ‘விடுதலை’ நாளிதழ் அலுவலகம், விடுதலை அச்சுக்கூடம், பெரியார் அருங்காட்சியகம், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், பெரியார் நினைவிடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் விடுதலை நாளிதழின் வரலாற்றையும், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் விடுதலை அச்சகத்தின் வரலாறு குறித்தும், ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை அச்சுத் துறையில் இருக்கும் சவால்கள் குறித்தும், சுயமரியாதைத் திருமணங்கள் – அதன் வரலாறு குறித்தும் பசும்பொன்னும், இசையின்பனும் மாணவர்களிடம் கலந்துரையாடினர். (23.09.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *