தொண்டாமுத்தூர், மார்ச் 2- தொண்டாமுத்தூர் ஒன் றிய கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 26.2.2023 அன்று காலை 10.00 மணியளவில் பி.என். புதூர் பழ.அன்பரசு இல் லத்தில் மாவட்ட தலை வர் தி.க.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் க.வீரமணி, மண்டல செயலாளர் ச.சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில மாணவர் கழக துணை செயலாளர் மு.ராகுல், பொதுக்குழு உறுப்பினர் பழ. அன்பரசு, மாநகர செயலாளர் ச.திராவிட மணி, மாவட்ட துணை தலைவர் ஆட்டோ சக்தி, செம் மொழி சுரேஷ், கா.சி. சிவக்குமார், வி.என்.சி இராஜசேகர் ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
தீர்மானம் 1: கு.வெ.கி ஆசான் அவர்களின் துணைவியார் பேராசிரியர் சாரதாமணி அம்மையார் அவர்களின் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் 2: தொண்டாமுத்தூர் ஒன்றியதில் ஒருநாள் பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்து வது எனவும் கிராமங்கள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவ தென தீர்மானிக்கப்பட் டது.
தீர்மானம் 3: தொண்டாமுத்தூர் ஒன்றிய அமைப்பாளராக கா.சி. சிவக்குமார் அவர்களை மாவட்ட கழகம் சார்பில் பரிந்துரை செய்கிறது.