விடுதலை எதற்கு?

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மாந்தர் கெடுதலை விலக்க…
கெடுதலெது? மண்ணைச் சுரண்டுவது மட்டுமா?
மாந்தர் உழைப்பைத் திருடுவதும் அல்லவா…
மனிதநேயம் மறந்து வாழ்வதும் கெடுதல்தான்…

அடிமைசெய்த வெளிநாட்டினரை விரட்டுவதா                                                   விடுதலை?
அடிமைத்தனம் உள்நாட்டிலெனினும்
விரட்டுவதும்தானே விடுதலை!
ஜாதியை விரட்டி பெறுவோம் விடுதலை.

வீதித்தீண்டாமை ஒழித்து அடைவோம் விடுதலை…
மதத்தைத் துரத்தியடித்து மனிதர்களுக்கு விடுதலை.
மனிதனைப் பிரிப்பது கடவுள் என்றால்…
அதனையும் எதிர்க்கும் ஆற்றலே
அறிவு விடுதலை!

எதனையும் கேள்வி கேட்பதே
பகுத்தறிவு விடுதலை!
வீரச்சுதந்திரம் வகுப்புவாரி விடுதலையே…
தூரம் ஒதுக்கியோர்க்கு,
இடஒதுக்கீடே விடுதலை!

சொந்த மண்ணில் ஒடுக்கப்பட்டோர் பாட்டாளிகள்…
ஈந்த உழைப்பிற்கு இழப்பீடுதான் விடுதலை!

– மாரி கருணாநிதி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *