கோவிட் காலத்தில் ‘ஆரோக்கிய சேது’ என்ற செயலியை உருவாக்கி பெரும் குழப்பம் விளைவித்த சீமா கண்ணா கையில் ஒப்படைக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் உருவாக்கம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கோவிட்-19 பெருந்தொற்று இந்தியாவை உலுக்கியபோது, அரசு “தொற்று தடுப்பு” என்ற பெயரில் அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது செயலி, சுகாதாரக் கருவியாக அல்லாமல் தனியுரிமை மீறல், கண்காணிப்பு மற்றும் நிர்வாக மர்மங்களின் அடையாளமாக மாறியது. இந்தச் செயலியின் தொழில்நுட்பச் செயல்பாடுகளை முன்னின்று நடத்திய குழுவின் தலைவராக இருந்தவர் சீமா அகர்வால்.

அவரது தலைமையில் நடந்த இந்தத் திட்டம், பல்வேறு முறைகேடுகள் மற்றும் சர்ச்சை களுடன் இணைக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெடித்த மர்மம் 2020 அக்டோபர் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சவுரவ் தாஸ் தாக்கல் செய்த மனு, ஆரோக்கிய சேதுவின் அடிப்படை உருவாக்கத்தையே கேள்விக்குள்ளாக்கியது.

தேசியத் தகவல் மய்யம் (NIC), ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மற்றும் தனியார் தன்னார்வ அமைப்புகள் ஆகிய மூன்றும் “இதை உருவாக்கியது யார், கோப்புகள் எங்கிருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தன. ஆனால் ஆரோக்கிய சேது இணையதளத்தில் தேசியத் தகவல் மய்யம் தான் உருவாக்கி நிர்வகிப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. “யாருக்குமே தெரியாது” என்ற பதில் ஏற்க முடியாதது என ஒன்றிய தகவல் ஆணையம் அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.

அரசுத் திட்டம் ஒன்றின் அடிப்படை ஆவணங்களே மறைக்கப்பட்ட அல்லது “தெரியாது” எனக் கூறப்பட்ட நிலை, வெளிப்படைத்தன்மை இல்லாத நிர்வாகத்தை அம்பலப்படுத்தியது. தனியுரிமை மீறலும் கண்காணிப்பு அச்சமும் தொடக்கத்தில் அரசுப் பணியாளர்கள், ரயில்/விமானப் பயணிகள் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வாழ்பவர்களுக்கு இச்செயலி கட்டாயமாக்கப்பட்டது. இது அரசியலமைப்பு வழங்கிய தனிநபர் சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் மூலம் இருப்பிடத் தரவைத் தொடர்ச்சியாகச் சேகரித்ததால், இது “கண்காணிப்புக் கருவியாக” மாறக்கூடும் என்ற விமர்சனம் வலுவாக எழுந்தது. சட்டப்பூர்வ பாதுகாப்புக் கூறுகள் எதுவும் இல்லாத நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பினர். மூலக் குறியீடு ஆரம்பத்தில் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை; சர்ச்சைகளுக்குப் பிறகே மே 2020-இல் ஆண்ட்ராய்டு பகுதி மட்டும் ஓப்பன் சோர்ஸாக மாற்றப்பட்டது. இது நம்பிக்கையை வளர்க்காமல், சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.

நிதி மற்றும் தனியார் ஈடுபாடு சந்தேகங்கள்அரசு மற்றும் தனியார் தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றியதால், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் விளம்பரங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட நிதி குறித்த முறையான கணக்கு வழக்கு விவரங்கள் உடனடியாகப் பொதுவெளியில் தணிக்கை செய்யப்படவில்லை. அரசுத் தரவுகளைக் கையாளும் பொறுப்பில் தனியார் துறைத் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டதால், வணிக ரீதியான பயன்பாட்டிற்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் அரசியல் தளத்தில் எழுப்பப்பட்டது., வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை கேள்விகளைத் தீவிரப்படுத்தியது.

சர்ச்சைகளுக்குப் பின் மத்திய அரசு தரவு அணுகல் மற்றும் அறிவுப் பகிர்வு நெறிமுறைகளை முறைப்படுத்தியது. கோவிட் அலையின் தீவிரம் குறைந்த பிறகு, செயலி CoWIN தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பதிவிறக்கவும், ஆரோக்கிய சேது 2.0 ஆக பிற சுகாதாரச் சேவைகளை ஒருங்கிணைக்கவும் மாற்றியமைக்கப்பட்டது.

ஆனால் அடிப்படைப் பிரச்சினைகள்—தனியுரிமை பாதுகாப்பு இல்லாமை, உருவாக்கப் பொறுப்பு மறைப்பு, மற்றும் கண்காணிப்பு அச்சம்—முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. ஆரோக்கிய சேது, பெருந்தொற்று கால அவசரத்தைப் பயன்படுத்தி தனியுரிமையைப் பலிகொடுத்த ஒரு முன்மாதிரியாக நின்றுள்ளது.

சீமா அகர்வாலின் தலைமையில் நடந்த இந்தத் திட்டம், அரசின் தொழில்நுட்பத் தலையீடு எவ்வளவு எளிதாகக் கண்காணிப்புக் கருவியாக மாறலாம் என்பதையும், வெளிப்படைத்தன்மை இல்லாதபோது மக்கள் நம்பிக்கை எவ்வளவு விரைவில் சிதறும் என்பதையும் காட்டியது. சுகாதார நெருக்கடி காலத்திலும் சட்டம், தனியுரிமை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை விட்டுக்கொடுக்கப்படக் கூடாது என்பதே இந்தச் சர்ச்சையின் முக்கியப் பாடம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *