மேடவாக்கத்தில் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஆலந்தூர், செப். 25- சென்னை மேடவாக்கம் பிள்ளை யார் கோயில் தெரு வில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தை தொண்டு நிறுவனம் ஒன்று கடந்த 10 நாள்களாக தூர் வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

நேற்று (24.9.2026) காலை தன்னார்வலர்கள் குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட் டிருந்த போது, பழமையான கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் பழங்கால எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த வகை எழுத்துகள் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 11-ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத் தில் தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட நடுகற்கள், கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளில் இடம் பெற்றிருந்த தாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வெட்டின் காலம், எழுத்து மற்றும் வரலாற்றுப் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்வதற்காக, இதனை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *