முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் என்னாயிற்று? ஆர்டிஅய் மூலம் அறியலாம்

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப்.25 சென்னை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவற்றின் மீதான நடவடிக்கை மற்றும் முன்னேற்ற அறிக்கையை கேட்டு செங்கல்பட்டை சேர்ந்த இரா.கோபிநாத் என்பவர் ஆர்டிஅய் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், முதலமைச்சரின் தனிப்பிரிவு, குறைதீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஜமாபந்தி மனுக்கள் மீது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்க வழிவகை இல்லை எனக்கூறி, கடந்த 2015-ஆம் ஆண்டின் பழைய உத்தரவு ஒன்றை மேற்கோள் காட்டி திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பொதுத் தகவல் அலுவலர் விவரங் களை வழங்க மறுத்து விட்டார்.

இது தொடர்பான வழக்கு விசா ரணை மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி முன்பு நேற்று  (24.9.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தர வில் கூறியிருப்பதாவது: முதலமைச் சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் துறைகளும் ஆர்டிஅய்-யின் கீழ் பொது அதிகார அமைப்புகளாகவே வருகின்றன.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அரசு அலுவலகத்தில் பெறப்பட்டு குறியீட்டு எண் வழங்கப்படும்போதே அவை ஆவணமாக மாறிவிடுகின்றன. அந்த ஆவணங்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்படும் அனைத்து தொடர் நடவடிக்கைகளும் ஆர்டிஅய் கீழ் ‘தகவல்’ வரையறைக்குள் அடங்கும்.

எனவே, முதலமைச்சர் தனிப் பிரிவு, குறை தீர்க்கும் நாள் மற்றும் ஜமாபந்தி மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் கோர பொது மக்களுக்கு முழு உரிமையுண்டு.

எனினும், பெறப்பட்ட மனுக்கள் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க குறைந்தபட்ச அவகாசம் தேவைப்படுவதால், மனு அளித்த 30 நாட்களுக்கு பிறகு ஆர்டிஅய் மூலம் இத்தகவல்களை கோரலாம்.

இந்த உத்தரவு தமிழ்நாடு அரசின் அனைத்து பொது அதிகார அமைப்புகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப உத்தர விட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *