சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது : உயர்நீதிமன்றம்

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 25- அரசியல் சுயலாபத்துக்காக பதவியிலிருந்து விலகியவர்கள் 5 ஆண்டுகளுக்கு தேர்தலி்ல் போட்டியிட முடியாதபடி சட்டத் திருத்தம் கொண்டுவரக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலகட்டத்தில் மக்கள் தீர்ப்பை புறக்கணித்து தங்களின் அரசியல் சுயலாபத்துக்காக பதவியிலிருந்து விலகியவர்கள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலி்ல் போட்டியிடாத வண்ணம் தடை விதிக்கவும், இதுதொடர்பாக உரிய சட்டதிருத்தம் கொண்டுவரவும், இடைத்தேர்தலுக்கான செலவை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரியும், மதுராந்தம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரியும் வழக்குரைஞர் கே.சுதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சிங்கார வேலன், ‘‘அரசியல் சுயலாபத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு வாரங் களில் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி ஆளுங்கட்சியில் இணைந்து மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளர்களாக போட்டியிடுவது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

இவ்வாறு பதவியிலிருந்து விலகிய வர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்” என்றார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேர்தல் ஆணையத்தின் கடமை முடிந்து விடுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தனது பதவியிலிருந்து விலகி னால் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் அறிவிப்புகள் வெளி யான பிறகு அதில் தலையிட முடியாது.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில்,  ‘‘பதவியிலிருந்து விலகியவர்கள் 5 ஆண்டுகளுக்கு தேர்தலி்ல் போட்டியிட முடியாதபடி சட்டத் திருத்தம் கொண்டு வருவது என்பது நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவை சார்ந்த விசயம். அதில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் மனுதாரரின் எந்த கோரிக்கையையும் ஏற்க இயலாது. வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *