நீதித்துறையா, அக்கிரகாரமா? நான்கு மாநிலங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் பெரும்பான்மையினர் பார்ப்பனர்களே!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப்.25 ஆந்திரப் பிரதேசம், கேரளம், உத்தரகாண்ட் மற்றும் கவுகாத்தி ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் புதிய நிரந்தர நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் விவரங்கள்:

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம்: மகேஸ்வர ராவ் குஞ்சம், டி.சி.டி.சேகர், சல்லா குணரஞ்சன், அவதானம் ஹரி ஹரநாத சர்மா.

கேரளம் உயர்நீதிமன்றம்: பி.கிருஷ்ணகுமார், கே.வி.ஜெயகுமார், எஸ்.முரளிகிருஷ்ணா, ஜோபின் செபாஸ்டியன், பி.வி.பாலகிருஷ்ணன்.

உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம்: சுபாஷ் உபாத்யாயா.

கவுகாத்தி உயர்நீதிமன்றம்: கவுசிக் கோஸ்வாமி.

கொலீஜியம் முறை மீது தொடரும் சமூக நீதி விமர்சனங்கள்!

நீதிபதிகள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, நீதித்துறையில் சமூக நீதி மற்றும் அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்து வம் குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மை யின சமூகங்களைச் சேர்ந்த வழக்குரை ஞர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக நிலவி வருகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாகவே இருப்பதாகவும், உயர்நீதிமன்ற உயர் பதவிகளில் ‘சமூக நீதி’ புறக்கணிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நீதித்துறை நியமனங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதோடு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ‘சமூக நீதி’ கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய கோரிக்கையாக உருவெடுத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *