( புதிய தொடர் ) AI… நல்ல AI செயற்கை நுண்ணறிவு… நல்ல செயற்கை நுண்ணறிவு!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஏ.அய், ai, செ.நு, செயற்கை நுண்ணறிவு, Artificial Intelligence

யாரைப் பார்த்தாலும் என்ன பேசினாலும் செ.நு.வில் வந்து முடிகிறது. இனி எல்லாம் செ.நு தானாமே? நமக்கு வேலை இருக்குமா?

பிள்ளைங்க செ.நு. படிச்சா வேலை கிடைக்குமா? செ.நு. கத்துக்க நல்ல இணையவழி கல்வி ஏதாச்சும் இருக்கா?

எங்க பார்த்தாலும் செ.நு. துப்பி வைச்ச படம், கட்டுரை, காட்சிப் பதிவாக இருக்கு! பார்க்கவே கடுப்பா இருக்கு!

என் நிறுவனத்திற்குத் தேவையான வலைதளம், மென்பொருள் எல்லாம் நானே செ.நு. வைச்சு பண்ணிட்டேன்! செ.நு அசத்துகிறது!

வேலை விட்டு விலகி 4 வருஷமாச்சு! இப்ப திரும்ப வேலைக்குப் போலாம்னா எல்லா ஒர்க் ஃப்ளோ (workflow)வும் செ.நு.க்கு மாறிடுச்சு! இப்ப இதுவும் கத்துக்கணும் போல!

சேட்ஜிபிடி நல்லதா? கிளாட் நல்லதா? எதைப் பயன்படுத்தினாலும் சட்டுனு ஃபிரீ லிமிட் முடிஞ்சிடுது? விலை மலிவா எந்த செ.நு. கிடைக்கும்?

தினம் ஒரே வேலையைத் திரும்ப திரும்ப மாங்கு மாங்குன்னு செய்றேன். இதெல்லாம் செ.நு. வைச்சு தானியக்கம் பண்ண முடியுமா?

எல்லாத்துக்கும் செ.நு. பயன்படுத்திப் பழகிட்டா நம்ம சிந்திக்கிற திறன், எழுத்து, கோடிங் (coding)னு நம்ம திறன் (skill) எல்லாம் மங்கிப் போயிடாதா? அதுக்குன்னு செ.நு. பயன்படுத்தாம இருந்தாலும் அடுத்தவன் முந்திக்கிட்டுப் போயிடுவான்!

எங்க செ.நு. பயன்படுத்தலாம், எங்க செ.நு. பயன்படுத்தக் கூடாது?

செ.நு. கிட்ட நம்ம கம்பெனி உள்விவரம் எல்லாம் சொன்னா அது திருடிட்டுப் போயிடாதா?

மன நலன், மருத்துவம்-னு செ.நு. கிட்ட நிறைய பேசுறேன். இது சரியா, தப்பா?

கொடுக்கிற எல்லா வீட்டுப்பாடத்தையும் பசங்க செ.நு. வைச்சுப் பண்ணிட்டு வந்துட்டா, இனி என்ன தான் வீட்டுப் பாடம் கொடுக்கிறது? எப்படித் தான் பள்ளிக்கூடத்துல சொல்லித் தர்றது?

எனக்கு ஆங்கிலம் அவ்வளவா தெரியாது. என்னால செ.நு கத்துக்க முடியுமா?

இந்த செ.நு. நல்லவரா, கெட்டவரா?

இது போல ஒவ்வொரு நாளும் எத்தனையோ கேள்விகள்…

எல்லாவற்றுக்கும் விடை தேடும் முயற்சியாக, அனைவருக்கும் செ.நு பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்கும் விதமாக வருகிறது….

செ.நு. தொடர்பாக உங்களுக்கு எழும் கேள்விகளையும் எழுதுங்கள்

அறிவியல் அரங்கம்

இரவிசங்கர் அய்யாகண்ணு (joinaitribe.com)

2005 தொடங்கி இணையத் தில் தமிழ், நுட்பம் முதலிய தலைப்புகளில் விழிப்புணர்வுச் செய்திகளைப் பதிந்து வருகிறார். அண்ணா பல்கலை.யில் பொறியியல் பட்டமும், சிங்கப்பூர் நன்யாங் பல்கலை.யிலும், ஜெர்மனியின் முன்சன் பல்கலை யிலும் முதுகலைப் பட்டம் பெற்று சில காலம் அய்ரோப்பாவில் அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் அறிவைக் கொண்டு சேர்க்கும் விக்கிப்பீடியா போன்ற கட்டற்ற இயக்கங்களில் ஈடுபட்டு வருகிறார். விக்கிப்பீடியாவை நடத்தும் விக்கிமீடியா அறக்கட்டளையில் இந்தியாவின் திட்ட மேலாளராகவும், ஆசிய / கிழக்கு அய்ரோப்பாவுக்கான வட்டார மேலாளராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இவருடைய பணியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு, கூகுள் முதலிய நிறுவனங்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எண்ணிம அறிவுத் (Digital Literacy) திறன் பயிற்சிகளை அளித்துள்ளார்.

(பேசுவோம்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *