ஒன்றிய அரசுப் பணி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒன்றிய அரசு துறைகளில் லோயர் டிவிஷன் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் நிரப்பி வருகிறது. 12- ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் பின்வருமாறு:

பணியிடங்கள்: லோயர் டிவிஷன் கிளர்க் (எல்.டி.சி)/ ஜூனியர் செகரட்டேரியேட் அசிஸ்டண்ட், டேடா எண்ட்ரி ஆபரேட்டர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் கிரேடு ஏ ஆகிய பதவிகளில் மொத்தம் 2,536 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.08.1999 க்கு முன்பாகவோ 01.08.2008 க்கு பிறகோ பிறந்தவராகவோ இருத்தல் கூடாது.

ஊதியம் எவ்வளவு? அதிகபட்சமாக ரூ.25,500 முதல்
ரூ. 81,100 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை: கணிணி வழியிலான இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, டைப்பிங் டெஸ்ட் ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 07.10.2026

தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க: https://ssc.gov.in/

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *