தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு விழிக்கொடை உறுதிப்படிவம் வழங்கிய குமரி மாவட்ட கழகத் தோழர்கள்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அறிவுலகப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்ட கழகக் தோழர்கள் நாகர்கோவில் கண் மருத்துவமனையில் டாக்டர் பெஜான் சிங் அவர்களிடம் விழிக்கொடை செய்ததற்கான படிவத்தினை நிரப்பிக் கொடுத்தனர். மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்க மாவட்ட கழகச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் விழிக்கொடை வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். கழகக் காப்பாளர் ம.தயாளன், தோவாளை ஒன்றிய தலைவர் ஞா.பிரான்சிஸ், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பெரியார் தாஸ், தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்ஸ், கழகத் தோழர் தி.ஞானவேல், திமுக தோழர் இராஜேஷ், ரத்தினமணி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழிக்கொடை செய்த தோழர்களுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *