‘திரிசூலம்’ யார் குடலைக் கிழிக்க?- கருஞ்சட்டை

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலையில் ஏற்ெகனவே பிரமாண்ட அளவு சிவன்-பார்வதி சிலைகள் உள்ளன.

தற்போது அங்கு அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள 65 அடி உயர மாபெரும்  திரிசூலம் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

விசாகப்பட்டினத்தின் புதிய அடையாளம்: 65 அடி உயர திரிசூலம் விசாகப்பட்டினம் நகர வளர்ச்சி கழகம் சார்பில், சுமார் 8 மாதமாக இந்தத் திரிசூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

65 அடி உயரம் கொண்ட இந்தத் திரிசூலத்தில் இணைக்கப்பட்டுள்ள உடுக்கை மட்டும் 18 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்டது.

இரவு நேரங்களில் மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் வண்ணமயமான எல்.இ.டி விளக்குகளால் இது அலங்கரிக்கப் பட்டுள்ளது.   மலை உச்சியில் அமைந்துள்ளதால், நகரின் எந்தப் பகுதியில் இருந்தும் இதைக் காண முடியுமாம்.

அமைச்சர் நாராயணா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சின்னம் குறித்து, ஆந்திர கல்வி அமைச்சர் நாரா லோகேஷ், “இது நமது கலாச்சாரத்தையும் ஆன்மிகத்தையும் பிரதிபலிக்கும் பெருமைக்குரிய விஷயம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அரசுத் தரப்பில் இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சி என்று கூறப்பட்டாலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் சில தரப்பினர் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்கின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள அனுமான் சிலை, அயோத்தி ராமன் சிலை என நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மக்களின் வரிப்பணம் இத்தகைய சிலைகளுக்காகச் செலவிடப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.   கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியை, இது போன்றவற்றிற்கு செலவிடுவது பொருளாதார ரீதியாகப் பின்னடைவையே தரும் என்பது இவர்களின் வாதம்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற நிலையில், குறிப்பிட்ட மத அடையாளங்களை இவ்வளவு ‘பிரமாண்ட’ மாக முன்னிறுத்துவது நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது.

“ஈட்டி, திரிசூலம், தண்டாயுதம் போன்றவற்றைச் சிலையாக வைப்பதன் மூலம் இளைய தலைமுறைக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம்?” என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இத்தகைய சிலைகளைப் பார்ப்பதன் மூலம் மக்கள் ஏதேனும் வரலாற்று உண்மைகளையோ அல்லது அறிவியல் அறிவையோ பெறப்போகிறார்களா என்றால் இல்லை. மாறாக, இது வெறும் புராணக் கதைகளையும் மூடநம்பிக்கைகளையும் வன்முறைகளையும் மட்டுமே வளர்க்கும்.

பாஜக ஆளும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இத்தகைய பிரமாண்ட சிலைகளை அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை, ஆராய்ச்சி மய்யங்களை உருவாக்குவதிலோ, அல்லது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதிலோ காட்ட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் மக்களின் அறிவுசார் மேம்பாட்டிலும், பொருளாதாரச் சமத்துவத்திலுமே அடங்கியுள்ளது. சிலைகளை விட சிறந்த கல்வி நிலை யங்களும், மருத்துவமனைகளும் நாட்டின் வருங்காலத் தூண்களான இளைஞர்களுக்கு உண்மையான நம்பிக்கையைத் தரும்.

‘‘காசைக் கரியாக்கலாமா?’’ என்று உபதேசம் சொல்பவர்களே பக்தி என்று சொல்லும்போது, கடவுள் நம்பிக்கை என்கிறபோது, மத மூடநம்பிக்கைப் பள்ளதாக்கில் தலைக்குப்புற விழுந்து வாழ்வையே தொலைத்துக் கொள்கிறார்களே! ஆர்.எஸ்.எஸின்
வி.எச்.பி. திரிசூலங்களை மக்களிடம் வழங்குவது வழக்கம். சூலத்தின் ஒரு முனை கிறித்தவர்களையும், இன்னொரு முனை முஸ்லிம்களையும், மூன்றாவது முனை மதச் சார்பின்மைப் பேசுபவர்களையும் குத்திக் கிழிக்கும் என்பதற்கு அடையாளம்தானே இது!

மக்கள்மீது அபிமானம் உள்ளதாக உண்மையில் காட்டிக் கொள்வதாகயிருந்தால் அவர்கள் என்ன சொல்ல வேண்டும் – என்ன செய்ய வேண்டும்?

‘நன்றாகப்படி அறிவை வளர்த்துக் கொள், பொருளாதாரத்திலும் முன்னேறு, நேரத்தை வீணாக்காதே!  சமூக நல்லிணக்கத்தைப் போற்று!’ என்றுதானே சொல்ல வேண்டும், வழிகாட்ட வேண்டும்!

மக்களின் புத்தியைக் குட்டிச் சுவராக்கும் வேலையைச் செய்யலாமா?

மக்களின் மத நம்பிக்கையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடிட அரசியல் செய்யலாமா? மதச் சார்பின்மை என்பது – நாக்கில் வழித்துக் கொள்ளத்தானா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *